கிண்ணியாவில் வாகன விபத்து: 12 பேருக்கு காயம் | தினகரன்

கிண்ணியாவில் வாகன விபத்து: 12 பேருக்கு காயம்

கிண்ணியா, சூரங்கள் பிரதேசத்தில் இன்று (20) மதியம் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர்கள் 12 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10636","attributes":{"alt":"","class":"media-image","height":"547","style":"width: 673px; height: 505px;","typeof":"foaf:Image","width":"729"}}]]

கிண்ணியா பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் ஆரம்பமானது.

சூரங்கல் பிரதேச இளைஞர் கழக வீரர்கள் குறித்த போட்டியில் கலந்து விட்டு நான்கு சக்கர உழவு இயந்திரம் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10637","attributes":{"alt":"","class":"media-image","height":"547","style":"width: 673px; height: 505px;","typeof":"foaf:Image","width":"729"}}]]

இவர்களில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இச்சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

(முள்ளிப்பொத்தானை குருப் நிருபர் - எம் எஸ் அப்துல் ஹலீம்)

 

 

 

 

 

 

 

 

 


Add new comment

Or log in with...