லசந்தவின் கொலையாளியின் அடையாளம் | தினகரன்


லசந்தவின் கொலையாளியின் அடையாளம்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவரின் உருவத்தை சித்தரிக்கும் படத்தை பொலிஸார் இன்று (17) வெளியிட்டுள்ளனர்.
 
பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சித்திர கலைஞர்களின் உதவியுடன், சாட்சியாளர்களினால் தெரிவிக்கப்பட்ட அங்க அடையாளங்களின் அடிப்படையில் குறித்த சித்திரம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10529","attributes":{"alt":"","class":"media-image","height":"559","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
முதலாவது சந்தேகநபரான இவர், 35 வயது தோற்றம் கொண்டவர் எனவும், 05 அடி 08 அங்குல உயரம் கொண்டவர் எனவும், கண்கள் சாம்பல் நிற தோற்றத்திலும், மாநிற தோற்றத்திலும் காணப்படும் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10530","attributes":{"alt":"","class":"media-image","height":"551","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இரண்டாவது சந்தேகநபரான இவர், 40 வயது தோற்றம் கொண்டவர் எனவும், 05 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், பருத்த உடல் தோற்றத்தைக் கொண்ட, கறுப்பு நிற தோற்றத்திலும் காணப்படும் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
இவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்க விரும்புவோர், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
071 - 8591753
 
071 - 8591770
 
077 - 3291500

Add new comment

Or log in with...