யோஷிதவின் பிணை பெப். 29 இல் தீர்மானம் | தினகரன்


யோஷிதவின் பிணை பெப். 29 இல் தீர்மானம்

கால்டன் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவர் தொடர்பிலான பிணை மனு எதிர்வரும் பெப்ரவரி 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதீமன்றம் இன்று (17) அறிவித்தது.
 
குறித்த விடயம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இதனை அறிவித்தார்.
 
இவ்விடயம் தொடர்பில், யோஷித ராஜபக்‌ஷ, நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, சவித்ர கவிஷான் திஸாநாயக்க, அஷான் ரபிநாத் பெனாண்டோ ஆகியோர் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி, பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...