ஜி-மெயிலில் இலவச 2GB

இன்று எம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் வழங்குனராக ஜி-மெயில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலவசமாக வழங்கப்படும் இந்த மின்னஞ்சல் சேவை, 15 ஜிபி இற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இந்த எல்லையை விரிவாக்குவதற்கு மாதாந்தம் பணம் செலுத்த வேண்டும் என்பது மற்றொருபுறம் இருக்க, தினமும் வந்து குவியும் மின்னஞ்சல்களால் எமது மின்னஞ்சல் சேமிப்பு பகுதி நிரம்பி விடும் நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதன்போது, எதை அழிப்பது, இதை விட்டு வைப்பது என எம்மால் திடீரென தீர்மானிக்க வேண்டி ஏற்படுகின்றது.

இதன் காரணமாக ஏராளமான பல மின்னஞ்சல்களை நாம் இழக்கவேண்டி ஏற்பட்டு விடுகின்றது. இதன்போது முக்கியமான பல மின்னஞ்சல்களையும் இழந்து விடுகின்றோம்.

அது மட்டுமல்லாது, தரப்பட்ட 15 ஜிபி சேமிப்பகத்தில், மின்னஞ்சல், படங்கள், கூகிள் ட்ரைவ் போன்ற கூகிள் சேவைகளை அனுபவிக்க வேண்டி நேரிடுகின்றது.

ஒரேயடியாக 5 ஜிபிக்களை அல்லது 10 ஜிபிக்களை பணம் கொடுத்து வாங்கலாம் எனும் நிலை அன்றி மாதாந்தம் பணம் செலுத்தும் வகையிலேயே கூகிளின் பொதிகள் காணப்படுகின்றன.

(உதாரணம் : 100 ஜிபிக்கு மாதாந்தம் 1.99 டொலர்கள்)

ஆயினும், இலவசமாக 2 ஜிபி சேமிப்பகத்தை கூகிள் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டே இந்த சேமிப்பக விரிவாக்கத்தை வழங்க கூகிள் முன்வந்துள்ளது.

இணையத்தை பயன்படுத்தும்

அனனவருக்கும் விழிப்புணர்னவ ஏற்படுத்தும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு தினம் வருடாந்தம் பெப்ரவரி 09 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது.

இத்தினத்தை முன்னிட்டே கூகிள் நிறுவனம் இவ்வாறு 2 ஜிபி இலவச இணைய சேமிப்பகத்தை தருகின்றது.

ஆயினும், 'இதோ எடுத்துக் கொள்ளுங்கள்' என எல்லோருக்கும் வழங்குவதற்கு கூகிள் முன்வரவில்லை.

கூகிள் கணக்கின் பாதுகாப்பு குறித்தான தகவல்களை உறுதிப்படுத்தியோருக்கே இந்த இலவச 2 ஜிபி சேமிப்பகம் வழங்கப்படுகின்றது.

கடந்த வருடமும் இதே தினத்தில் (2015.02.09)) இவ்வாறு 2 ஜிபி இலவச இணைய சேமிப்பகத்தை கூகிள் நிறுவனம் வழங்கியிருந்ததோடு அது பெப்ரவரி 17 ஆம் திகதியுடன் (ஒரு வாரத்தில்) முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இம்முறை இது குறித்தான முடிவுத் திகதியை அது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்பதோடு, கூகிள் அலுவலக கணக்கு (Google Apps for Work) அல்லது கூகிள் கல்வி சம்பந்தமான கணக்குகளுக்கு (Google Apps for Education) உரித்தானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த வருடம் இவ்வாறு இலவச 2 ஜிபியை பெறாதவர்கள் இம்முறை பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் கடந்த வருடம் இலவச சேமிப்பகத்தை பெற்றுக்கொண்டோருக்கு இம்முறை 19 ஜிபி (15 + 2 + 2) இணைய சேமிப்பகம் கிடைப்பதோடு, இம்முறை பெறும் உங்களுக்கு 17 ஜிபி (15 + 2) சேமிப்பகம் கிடைக்கும்.

அது மட்டமல்லாது உங்கள் கணக்கு சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு யாராவது அதனை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் இப்படிமுறைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் மற்றுமொரு நன்மையாகும்.

இதற்கு நீங்கள் 2 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

1. முதலில் https://myaccount.google.com/security அல்லது https://security.google.com/settings/security/secureaccount அல்லது https://goo.gl/PjAliM எனும்  இணைப்புக்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் உங்கள் கூகிள் கணக்கினுள் நுழைந்து Security Check-up எனும் பகுதியினுள் நுழையுங்கள்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10518","attributes":{"alt":"","class":"media-image","height":"496","typeof":"foaf:Image","width":"673"}}]]

3. இப்போது உங்கள் கணக்கின் பாதுகாப்பு தரவுகளை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது கணக்கின் கடவுச்சொல் (Password) மறந்துவிடும் சந்தர்ப்பத்தில் அதனை மீட்டுக் கொள்வதற்கான வழியே இதுவாகும்.

(இங்கு தொலைபேசி இலக்கம்,    தகவல் பரிமாற்றத்திற்கான மற்றுமொரு மின்னஞ்சல் முகவரி என்பவற்றை உறுதிப்படுத்துங்கள்)

4. அதனை அடுத்து நீங்கள் பயன்படுத்தும் கூகிள் கணக்கு எந்த சாதனங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளது என காட்சிப்படுத்தப்படும். அவற்றில் எவ்வித பிரச்சினையும் காணப்படாவிட்டால் Looks Good என்பதை அழுத்தி அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10519","attributes":{"alt":"","class":"media-image","height":"503","typeof":"foaf:Image","width":"673"}}]]

அதில் ஏதாவது சிக்கல் காணப்படுமாயின், Something Looks wrong என்பதை கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.

5. பின்னர் உங்கள் கூகிள் கணக்குடன் தொடர்புற்றுள்ள பல்வேறு செயலிகள் அல்லது இணைப்புகள் காண்பிக்கப்படும் அவை உங்களால் பயன்படுத்தப்படுபவையாயின் கவலை இன்றி அடுத்த படிமுறைக்குச் செல்லலாம். இல்லையாயின், அதில் தேவையற்றவற்றை நீக்கி விடலாம்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10520","attributes":{"alt":"","class":"media-image","height":"488","typeof":"foaf:Image","width":"673"}}]]

6. இப்போது உங்களுக்கு 2 ஜிபி வழங்குவதற்கான படிமுறை. இதில் "To help celebrate Safer Internet Day 2016, we added 2 GB of free Drive storage to your Google account because you completed the Security Checkup" என்பதில் காணப்படும்free Drive storage என்பதை கிளிக் செய்யுங்கள்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10521","attributes":{"alt":"","class":"media-image","height":"393","typeof":"foaf:Image","width":"673"}}]]

இப்போது புதிய பக்கம் ஒன்றில், உங்களுக்கு 2 ஜிபி இணைய சேமிப்பகம் வழங்கப்பட்டிருப்பது காண்பிக்கப்படும்.

(அதாவது 15 ஜிபி சேமிப்பகம் கொண்டோருக்கு 17 ஜிபி ஆக மாறியிருக்கும்)

தரப்பட்ட வட்ட வரைபில் சுட்டியை (Mouse) வைக்கும்போது, அதில் கூகிள் ட்ரைவ், ஜி மெயில், கூகிள் புகைப்படம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சேமிப்பு அளவு காண்பிக்கப்படுவதோடு, நீங்கள் போனஸாக பெற்றுக்கொண்ட இலவச 2 ஜிபி உம் காண்பிக்கப்படுவதை அவதானிக்கலாம்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10522","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]

அடுத்த வருடமும் இந்த 2ஜிபி கிடைக்குமா... பொறுத்திருந்து பார்ப்போம் ;-)

 (றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து) 

 தினகரன் செயலியை பதிவிறக்கம்  செய்ய  mmms.lk/lakehouse/Thinakaran.html 

 


Add new comment

Or log in with...