ஹோமாகம சம்பவம்; மேலும் 04 தேரர்கள் சரண் | தினகரன்

ஹோமாகம சம்பவம்; மேலும் 04 தேரர்கள் சரண்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நான்கு பிக்குகள் இன்று (15) ஹோமகம பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
 
ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமண தயாரத்ன உள்ளிட்ட மேலும் இரு பிக்குகளே இவ்வாறு சரணடைந்துள்ளனர்.
 
ஹோமாகம நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கட்டுக்கடங்காத வகையில் நடந்துகொண்டமை தொடர்பில், குறித்த பிக்குகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...