இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி: தொடர் 1-1 என சமன் | தினகரன்

இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி: தொடர் 1-1 என சமன்

தான் எதிர்கொண்ட முதலாவது பந்தில் திலகரத்ன டில்ஷான் ஆட்டமிழந்தார்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மூன்று ரி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் இன்று (12) இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. இதன் அடிப்படையில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 196 ஓட்டங்களை பெற்றது.
 
ஷிக்கர் தாவன் 51 (25))
ரோஹித் சர்மா 43 (36)
 
பந்துவீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்டுகளை பெற்றதோடு, அது ஹெட்ரிக் (Hatirck) (ஹார்டிக் பாண்ட்யா, சுரேஷ் ரைனா, யுவராஜ் சிங்) விக்கெட்டாக அமைந்தது.  இது இலங்கை அணி வீரர் ஒருவரால் பெறப்பட்ட முதலாவது ரி20 ஹெட்ரிக் ஆகும்.
 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10419","attributes":{"alt":"","class":"media-image","height":"449","typeof":"foaf:Image","width":"673"}}]]

ஹெட்ரிக் சாதனையை நிலை நாட்டிய திசர பெரேரா

(ஹார்டிக் பாண்ட்யா, சுரேஷ் ரைனா, யுவராஜ் சிங்)

 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த தொடக்கத்தை வழங்காது ஆட்டமிழந்தனர்.
 
சாமர கபுகெதர 32 (27)
தினேஷ் சந்திமா 31 (30)
 
இதனை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
 
இதேவேளை, ரி20 போட்டிகளில் இந்திய அணி பெற்ற அதிக ஓட்ட வெற்றியின் அடிப்படையில் இது மூன்றாவது இடத்தை பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதன் அடிப்படையில் 3 போட்டிகளைக் கொண்ட தொடர்  1-1 என சமனிலை அடைந்தது.
 
போட்டியின் நாயகனாக ஷிக்கர் தாவன் தெரிவானார்.
 
3ஆவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) விசாகபட்டினத்தில் இடம்பெறவுள்ளது.

Add new comment

Or log in with...