02 படகுகளுடன் 12 தமிழக மீனவர்கள் கைது | தினகரன்

02 படகுகளுடன் 12 தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவர்களது 02 இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அலவி அக்ரம் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மீனவர்கள், படகுகளை விடுவிக்கும் வரை இலங்கையர்களை கச்சதீவு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது எனக்கூறி இராமேஸ்வரம் மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு படகு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி தலைமன்னார் வடமேற்கு கடற் பிரதேசத்தில் மீன்பிடித்த போதே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தலைமன்னார் கடற்படை முகாமில் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...