சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை 28 இல் | தினகரன்

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை 28 இல்

சட்டக்கல்லூரிக்கான (LLB), திறந்த பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
குறித்த பரீட்சைக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதற்கான விண்ணப்பங்களை அனுப்பியோருக்கு SMS மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
குறித்த பரீட்சைகள் இம்மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ள இருந்த நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் திகதி பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...