யோஷிதவுக்கு பெப். 25 வரை விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

யோஷிதவுக்கு பெப். 25 வரை விளக்கமறியல் நீடிப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்கு பெப்ரவரி 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
யோஷிதவுடன், CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக செயற்பட்ட நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, அஷான் ரவிநாத் பெனாண்டோ, கவிஷான் திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இவ்வழக்கு தொடர்பில் கடந்த ஜனவரி 30 ஆகைது செய்யப்பட்டதோடு, குறித்த ஐவருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட ரூபா 36.5 கோடியைக் கொண்டு CSN (Carlton Sports Network) நிறுவனத்தை ஆரம்பித்ததாக தெரிவித்தே, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவால் (FCID) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன் சட்டத்திற்கு புறம்பான வெளிநாட்டு உதவிகளின் மூலம் பணத்தை பெற்று, வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை, குறித்த நிறுவனத்திற்கென இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதியை குறைத்து காட்டியமை, அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களும் அதில் உள்ளடங்குகின்றன.
 
இன்றைய தினம் (11) இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணைகளின் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நீதிமன்றத்திற்கு வந்திருந்ததோடு, இது தொடர்பில் ஊடகங்களுக்கு எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காது சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...