பிணை இரத்து; ஞானசார மீண்டும் விளக்கமறியலில் | தினகரன்


பிணை இரத்து; ஞானசார மீண்டும் விளக்கமறியலில்

இன்றைய தினம் (09) இடம்பெற்ற நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்ட ஞானசார தேரரை மீண்டும் நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்த்யா எக்னலிகொடவை மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்தே, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு உத்தரவிட்டார்.
 
மேலும் ஞானசாரவுக்கு பிணை வழங்க முடியுமா என நாளை (10) ஆலோசித்து முடிவு செய்யப்படும் என நீதவான் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...