Instagram பிரபல்யத்திற்கு காரணம் இதுதான்... | தினகரன்

Instagram பிரபல்யத்திற்கு காரணம் இதுதான்...

Yahoo நிறுவனத்தின் ஆய்வாளர்கள் அண்மையில் தங்களது ஆய்வில் எடுத்துக்கொண்ட விடயம்: 'INSTAGRAM இன் பிரபல்யத்திற்கு காரணம் என்ன?" என்பதுதான்.

படங்களை பகிர்வதற்கு பயன்படும் மிக பிரபல்யமான சமூக வலைத்தளமே இன்ஸ்டாகிராம். இது 2010 இல் ஆரம்பிக்கப்பட்டு 2012 அளவில் சுமார் 100 மில்லியன் பயனர்களையும், 2014 இல் 300 மில்லியன் பயனர்களையும் கொண்டதாக மாற்றமடைந்ததோடு, 2015 டிசம்பரில் இது, 400 மில்லியனாக அதிகரித்தது. இதற்கிடையில் இச்செயலியை, பேஸ்புக் நிறுவனம் 2012 இல் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியமையும் நீங்கள் அறிவீர்கள்.

இவ்வாறான பாரியளவான பயனாளர்களை கிட்டுவதற்கு காரணம் யாதென கேள்விகளுக்கு ஆய்வாளர்களிடமிருந்து பல விடைகள் கிடைத்தபோதிலும் அவை விவாதத்திற்குட்பட்டதாகவே காணப்பட்டன.

இதனையடுத்து யாகூ (Yaho) நிறுவனம் நடத்திய ஆய்வில் கிடைத்த ஆச்சரியமளிக்கும் வகையிலான விடையாக அதிலுள்ள பில்டர்களே (Filters) அதன் மாபெரும் வளர்ச்சிக்கும் பிரபல்யத்திற்கும் காரணம் என அறியப்பட்டது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10244","attributes":{"alt":"","class":"media-image","height":"378","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]

உண்மையில் அது ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமாகும். இந்த பில்டர்கள் மூலம், படங்களுக்கு பல்வேறு இயல்புகளை அல்லது மெருகூட்டல்களை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு படத்தை INSTAGRAM இல் அதே நிலையில் பகிராது அதிலுள்ள பில்டர் ஒன்றை வழங்கி பகிர்வதற்கே பாவனையாளர்கள் விரும்புவதோடு அப்படத்தை அசல் நிலையில் பகிரும்போது நண்பர்களிடம் கிடைக்கின்ற வரவேற்பை விட, மெருகூட்டல்களுடனான நிலையில் அதற்கு அதிகளவான வரவேற்பு கிடைப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததை ஆய்வில் அறியப்பட்டது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10245","attributes":{"alt":"","class":"media-image","height":"337","typeof":"foaf:Image","width":"673"}}]]

இதன்படி Photo ஒன்றை பார்க்கும் ஒருவர் அப்படம் அதன் உண்மையான தோற்றத்திலிருக்கும் போது காட்டும் ஆர்வம், அது மாற்றத்திற்குள்ளான நிலையில் உள்ளபோதுள்ளதை விட குறைவாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இவ்வாய்வு 'ஏன் நாங்கள் எமது படத்தை பில்டர் செய்கிறோம்? அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?" எனப் பெயரிடப்பட்டிருந்தது. இவ்வாய்வின் படி பில்டர்களுடனான படங்கள் 21 வீத மேலதிக வரவேற்பைப் பெறுவதோடு அது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதிலும் ஆர்வம் காணப்பட்டது. அத்துடன் 45 வீத மேலதிக கொமன்டுகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10246","attributes":{"alt":"","class":"media-image","height":"384","typeof":"foaf:Image","width":"673"}}]]

இதனை மற்றொரு விதத்தில் குறிப்பிட்டால், நீங்கள் எவ்வித சேர்க்கையையும் செய்யாது பகிரும் படங்கள் எவ்விதத்திலும் வரவேற்பை பெறாது என்பதாகும்.

அத்துடன் இவ்வாய்வின் அடிப்படையில் ஆய்வாளர்களால், படங்கள் எவ்வகை சேர்க்கையுடன் வெளியிட வேண்டும் எனும் அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நீங்கள் பகிரும் படங்கள் குளிர்மையான வண்ணம் கொண்டதாக அமைவது சாலச்சிறந்தது எனக் குறிப்பிடப்படுகின்றது. அதன்படி நீலம் சார்ந்த வண்ணம் மிக்கதாக மாற்றும் போது அதிக லைக்கினை பெறலாம். அத்துடன் படத்தின் Contrast ஐ அதிகரிப்பதோடு அதன் இருள் தன்மையை குறைப்பதன் மூலம் தெளிவான படத்தைப் பெறலாம் என்பதோடு அது இன்னும் அப்படத்தை கவர்ச்சிக மிக்கதாக மாற்றலாம் என்பது அவர்கள் தரும் அறிவுரையாகும்.

இந்த பயன்மிகு ஆய்வானது உலகளாவிய ரீதியிலான இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களுக்கு அதிகளவான லைக்|களை பெறுவதற்கு ஆலோசனையாக அமைந்துள்ளதோடு, படங்களை மாற்றம் செய்யும் ஆற்றலையும் வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 (றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து) 

 தினகரன் செயலியை பதிவிறக்கம்  செய்ய  mmms.lk/lakehouse/Thinakaran.html 

 


Add new comment

Or log in with...