தர்கா நகர் மைதான திறப்பு விழா: புளூ ஸ்டார் கழகத்திற்கு அஸ்லம் ஹாஜியார் கிண்ணம் | தினகரன்


தர்கா நகர் மைதான திறப்பு விழா: புளூ ஸ்டார் கழகத்திற்கு அஸ்லம் ஹாஜியார் கிண்ணம்

 (பேருவளை விசேட நிருபர்)

எம்.எஸ்.எம். அஸ்லம் ஹாஜியார் வெற்றிக் கிண்ணத்திற்காக இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் பேருவளை உதைபந்தாட்ட லீக் அணியை களுத்துறை புளூ ஸ்டார் கழகம் 3 - 0 என்ற கோள்களால் இலகுவாக வீழ்த்தியது.

தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி புனரமைக்கப்பட்டு கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வை ஒட்டியே இந்த போட்டி இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த மைதானத்தை திறந்துவைத்தார். இந்த மைதானத்தின் புனரமைப்புக்கு அவர் 30 இலட்சம் ரூபாய் நிதியை ஒதிக்கி இருந்தார்.

இந்த திறப்பு வைபத்தை ஒட்டி நடந்த போட்டியில் புளூ ஸ்டார் சார்பில் முஹமது பர்ஸீன் இரண்டு கோல்களை போட்டதோடு ஜிமி ஒருகோலை போட்டார்.

இப் போட்டிக்கு பிரதான மத்தியஸ்தராக எம்.ஐ.எம். அஸ்லம், உதவி மத்தியஸ்தர்களாக எம்.என்.எம். ரிம்ஸான், மொஹமட் ரிபான் மற்றும் மொஹமட் பாயிக் ஆகியோர் பணியாற்றினர். 


Add new comment

Or log in with...