இணைந்து செயற்பட பொன்சேகா - ரணில் ஒப்பந்தம்

ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கிடையில் இன்று (03) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10096","attributes":{"alt":"","class":"media-image","height":"324","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்ட குறித்த ஒப்பந்தத்தில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தகக்து.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10095","attributes":{"alt":"","class":"media-image","height":"320","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
பிரதமரின் இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கூட்டமைப்பாக செயற்படும் எனும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10098","attributes":{"alt":"","class":"media-image","height":"553","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதன்போது கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா, ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தலைமையின் கீழ், நாட்டுக்கு பலனளிக்கும் வகையில், நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதே தனது எதிர்பார்ப்பாகும் என்றார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10099","attributes":{"alt":"","class":"media-image","height":"446","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
அப்போதிருந்த அரசியல் நிலைமைகளை கருத்திற்கொண்டு தனித்து செயற்பட்டதாகவும், தற்போது நாட்டில் நிலவும் நிலைமைகளை கருத்திற்கொண்டு, காலத்தின் தேவை கருதி இவ்வாறு ஒன்றிணைந்துள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
இதேவேளை, ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் உறுப்புரிமையைப் பெற்ற காலஞ் சென்ற சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சரத் பொன்சேகாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
(படங்கள்: ருக்மால் கமகே, பிரதமர் அலுவலகம்)

Add new comment

Or log in with...