ஆர்ப்பாட்டம்; துறைமுக நுழைவு கட்டண அதிகரிப்பு | தினகரன்

ஆர்ப்பாட்டம்; துறைமுக நுழைவு கட்டண அதிகரிப்பு

துறைமுக நுழைவுக் கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்துவோர் இன்று (03) காலை முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த நவம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட, இவ்வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் குறித்த கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வார்ப்பட்டம் காரணமாக துறைமுகத்திலிருந்து பொருட்களை விடுவித்தல், பொருட்களை துறைமுகத்திற்கு கொண்டு செல்லல் போன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, துறைமுகத்தை பயன்படுத்துவோரின் கூட்டமைப்பின் அழைப்பாளர் வீ.ஐ. ஆப்தீன் தெரிவித்தார்.
 
இப்போராட்டத்தில், கொள்கலன் (Container) உரிமையாளர்கள், லொறி உரிமையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், துறைமுக எழுதுனர் (Wharf Clerk) உள்ளிட்ட சுமார் 12,000 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...