ஒரு பில்லியன் பயனரை கடந்த ஜி-மெயில்

இணைய சேவை வழங்குனரான கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைத் தளமான ஜி-மெயில் (Gmail), இன்றைய தினம் (02) ஒரு பில்லியன் செயற்பாட்டிலுள்ள பயனர்களை எட்டியுள்ளது.
 
இது குறித்து தங்களது பயனர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜி-மெயில், தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகளில் (டுவிற்றர், கூகிள் பிளஸ்) தாம் ஒரு பில்லியன் பயனர்களை கொண்டுள்ளமையை தெரியப்படுத்தும் வகையிலாள  வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஜி-மெயில் நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
 
அத்துடன் இந்த மைல்கல்லை WhatsApp நிறுவனமும் எட்டியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இம்மைல்கல்லை எட்டியுள்ள மற்றுமொரு நிறுவனம் பேஸ்புக் ஆகும்.

 


Add new comment

Or log in with...