கப்பலுடன் படகு மோதி மூழ்கியது; ஐவரை காணவில்லை | தினகரன்

கப்பலுடன் படகு மோதி மூழ்கியது; ஐவரை காணவில்லை

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற 'ஆதார புதா' எனும் மீன்பிடி படகு வர்த்தக கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது.
 
இதிலிருந்த 06 பேரில், ஐவரை காணவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
 
நேற்று (31) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் சிறிய இராவணா கோட்டை கடல் பகுதியிலிருந்து 40 மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது, குறித்த பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகில் இருந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த ஒரு மீனவரை காப்பாற்றியுள்ளனர்.
 
குறித்த படகு தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது எனவும், காணமல் போன மீனவர்கள் ரத்கம மற்றும் தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 
 
குறித்த ஐவரையும் தேடும் பணியில், கடற்படை டோரா படகுகள் இரண்டும் மேலும் பல படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

Add new comment

Or log in with...