விரல் நுனியில் வாகனங்களின் தகவல்

அவசரமாக தகவல் ஒன்றை பெறுவதற்கோ, அனுப்புவதற்கோ கைகொடுக்கும் கையடக்க தொலைபேசிகள் பலருக்கு உதவியாக இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அது உபத்திரம் எனக் கூறியவர்கள் கூட இன்று வைத்துள்ளமையானது, அதன் முக்கியத்துவத்தை அது பறைசாற்றியுள்ளதையே குறிப்பிடுகின்றது.

பல்வேறு தகல்வகள், சேவைகள் என பல்வேறு கோணத்தில் உதவுவதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளமையானது, மொபைல் போன்களின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உங்கள் வாகனம் குறித்த தகவலை அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியே, Sri Lanka Vehicle Info எனப்படும் இலங்கை வாகன தகவல் செயலி இது DMT எனவும் அழைக்கப்படுகின்றது. அதாவது மோட்டார் வாகன திணைக்களத்தின் (Department of Motor Traffic) அனுமதியுடன் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறு அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10013","attributes":{"alt":"","class":"media-image","height":"899","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"527"}}]]

அன்ட்ரொய்ட் தொலைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம், உங்கள் வாகனம் தொடர்பான தகவல்களை பெறலாம். அவசரமாக உங்களது அல்லது உங்கள் நண்பரின் வாகனத்தின் தகவல் தேவைப்படுமிடத்தில், வாகன இலக்கத்தை வழங்கியதும், அதன் எஞ்சின் இலக்கம், அது எவ்வகையான வாகனம், அதன் தயாரிப்பு நிறுவனம், அதன் வகை, அதன் உற்பத்தி வருடம் உள்ளிட்ட தகவல்களை வழங்குகின்றது இந்த செயலி.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10005","attributes":{"alt":"","class":"media-image","height":"900","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"527"}}]]

அத்துடன் குறித்த வாகனத்தின் உரிமையாளரை வழங்கி வந்த இந்த செயலி, தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அத்தகவலை வழங்குவதை நிறுத்தியுள்ளது. ஆயினும் தனிநபர் அல்லாது நிறுவனங்களின் பெயர்களில் அல்லது காப்புறுதி நிறுவனங்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால் அத்தகவலை வழங்குகின்றது இந்த செயலி.

அது மட்டுமல்லாது, வாகனத்தின் வருமான வரி காலாவதி தொடர்பான விவரத்தையும் இந்த செயலி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10009","attributes":{"alt":"","class":"media-image","height":"900","typeof":"foaf:Image","width":"527"}}]]

மேலும், தற்போது போக்குவரத்துத் திணைக்களத்தில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அல்லது அடுத்து வழங்கப்படவுள்ள வாகனப் பதிவு இலக்கத்தை அறிந்துகொள்ளவும் இந்த செயலி உதவுகின்றமையானது தொழில்நுட்பத்தின் உச்ச பலனை வழங்கும் நோக்கில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10014","attributes":{"alt":"","class":"media-image","height":"900","typeof":"foaf:Image","width":"527"}}]]

இதற்காக ONGOING NUMBER (தற்போது செல்லும் இலக்கம்) என்பதை தெரிவு செய்ததும், குறித்த வாகனம் எவ்வகையானது என வழங்குவதன் மூலம் அதன் அடுத்த வாகனப் பதிவு இலக்கத்தை பார்க்க முடியும்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10015","attributes":{"alt":"","class":"media-image","height":"899","typeof":"foaf:Image","width":"527"}}]]

நேரடியாக, இலங்கை வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் வலையமைப்புடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயலியை இயக்க, இணைய உதவி அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்வரும் இணைப்பின் மூலம் தரவிறக்குங்கள்.

http://goo.gl/3rTJnB

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10008","attributes":{"alt":"","class":"media-image","height":"150","typeof":"foaf:Image","width":"150"}}]]

 (றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து) 

 தினகரன் செயலியை பதிவிறக்கம்  செய்ய  mmms.lk/lakehouse/Thinakaran.html 

 


Add new comment

Or log in with...