வருடாந்த கட்டணம் இழந்து புது வசதிகளுடன் WhatsApp

அனைவரும் பயன்படுத்தும் குறுந்தகவல் பயன்பாடான வட்ஸ்அப்பில் (WhatsApp) இதுவரை முதல் ஒரு வருடத்திற்கு மட்டும் இலவசமாகவும் அதன் பின் 0.99$ ஐ வருடாந்த கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினை விதித்திருந்தது. தற்போது அந்த தடையை நீக்கும் வகையில் அதன் வருடாந்த கட்டணத்தை அகற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

பில்லியன் கணக்கான பயனாளர்களைக் கொண்ட வட்ஸ்அப்பை வாங்கிய பேஸ்புக் நிறுவனம் தற்போதுள்ள வர்த்தக நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முதற் படியே இது என கூறலாம்.

இவ்வாறு வட்ஸ்அப்பை இலவசமாக பயன்படுத்த முடியுமானால் அது விளம்பரங்களால் நிறைந்துவிடுமோ என எண்ணத் தோன்றலாம். ஆனால், இல்லை என்பதே அதற்கு பதிலாகும்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10001","attributes":{"alt":"","class":"media-image","height":"300","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 673px; height: 361px;","typeof":"foaf:Image","width":"559"}}]]

ஏனெனில் இதற்குமுன் YouTube தளம் விளம்பரமில்லா மாதாந்த கட்டண முறையில் அல்லது விளம்பரத்துடன் இலவசமாக காணும் முறையை அறிமுகபடுத்தியிருந்தது. ஆனால் வட்ஸ்அப், இதுபோன்ற சலுகைகளை வழங்காது, புதிய ஒரு யுத்தியை கையாளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் தளத்திற்கு அடுத்ததாக மிக சரளமாக பயன்படுத்தக்கூடிய செயலியாக வட்ஸ்அப் காணப்படுவதால், அது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களை சென்றடையும் அனைத்து விதமான வியாபார நுணுக்கங்களையும் வட்ஸ்அப்பின் வழியே வழங்கும் திட்டமொன்றையே அந்நிறுவனம் உருவாக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10000","attributes":{"alt":"","class":"media-image","height":"473","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 673px; height: 473px;","typeof":"foaf:Image","width":"673"}}]]

குறிப்பாக, கொடுக்கல் வாங்கல், ரயில், விமான டிக்கெட் கொள்வனவு, முன்பதிவு போன்றவற்றை மேற்கொள்வதற்கான வசதியை இதனூடாக மேற்கொள்ளும் வசதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய  உபகரணங்களின் விற்பனை, கணினி வன்பொருள் Computer Hardware) மற்றும் மென்பொருள்  (Software) மற்றும் வீட்டு உபகரணங்களின் விற்பனை தளங்களுக்கிடையேயான ஒரு இணைப்பை (Interconnectivity) வழங்கவுள்ளது.

தற்போது இந்த சோதனைகளை முன்னோட்டமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அனைத்து பரிமாற்றங்கள், பரிவர்த்தனைகளை கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை வட்ஸ்அப்பின்; ஊடாக பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளது.

அத்துடன், உங்கள் வட்ஸ்அப் செயலியிலுள்ள அனைத்து உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகளை பாதுகாப்பதற்கான வசதியை வட்ஸ்அப் செயலியின் தற்போது வெளியாகியுள்ள பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக கூகிள் ட்ரைவ் மூலமான பிற்காப்பு (Backup) சேவை வழங்கப்பட்டுள்ளது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"10002","attributes":{"alt":"","class":"media-image","height":"561","typeof":"foaf:Image","width":"673"}}]]

இதற்கு Settings -> Chats and Calls -> Chat backup எனும் பகுதிக்கு சென்று அவ்வசதியை பெறலாம்.

இதன் மூலம் உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது புதிய தொலைபேசியை பயன்படுத்த நேரிட்டாலோ, இவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறிப்பிட்ட ஒரு செய்தி உங்களுக்கு பிடித்துவிட்டாலோ, அதனை பின்னர் பார்க்க நினைப்பீர்களேயானால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9999","attributes":{"alt":"","class":"media-image","height":"390","typeof":"foaf:Image","width":"683"}}]]

இதற்கு, குறித்த விடயத்தை தொடர்ச்சியாக அழுத்தியதும், மேல் பகுதியில் தோன்றும் நட்சத்திர அடையாளத்தை தெரிவு செய்வதன் மூலம், முக்கிய விடயமாக அதனை சேமிக்கலாம்.

Chats tab -> Menu -> Starred Messages என்பதற்கு சென்று பின்னர் அதனை  பார்வையிடலாம்.

 (றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து) 

 தினகரன் செயலியை பதிவிறக்கம்  செய்ய  mmms.lk/lakehouse/Thinakaran.html 

 

 


Add new comment

Or log in with...