Microsoft இன் புதிய சேவை CIE

Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் CIE வசதி தற்போது இலங்கைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
அதாவது Customer Immersion Experience (CIE)எனப்படும் 'வாடிக்கையாளரை  மூழ்கவைக்கும் அனுபவம்' எனப் பெயரிடப்பட்டுள்ள  இவ்வசதியானது தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறையிலுள்ளோருக்கு, பெரிதும் பயனளிக்கக்கூடிய ஒன்றாகும்.
 
இந்த CIE வசதியின் மூலமான புதிய தொழில்பத்தினூடாக, நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் அபிவிருத்தி என்பன உயர்வடைவதோடு, அவற்றிற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்கின்றது.
 
CIE வசதியானது, மைக்ரோசொப்ட் தொழில்நுட்ப ரீதியான தயாரிப்புகளான Office 365, Office, Exchange, SharePoint, Skype for business, Project, Visio, Windows, Windows Phone, Dynamics CRM and the Enterprise Management Suite ஆகிய மென்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றிணைக்கப்பட்ட சேவை மற்றும் தொழில்நுட்ப உதவியாகும்.
 
இதன் மூலம், நேரடியான தொடர்பாடல், உடனடி அறிக்கை மற்றும் தகவல்களை ஆராய்தல், உலகின் எந்த ஒரு மூலையிலுள்ள சக ஊழியருடனான தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பாதுகாப்பாகவும் இலகுவாகவும் உடனடியாகவும் மேற்கொள்வதற்கும், நாளாந்த வணிக ரீதியான நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கும் முடிகின்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9964","attributes":{"alt":"","class":"media-image","height":"446","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
நவம் மாவத்தையிலுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இது இலங்கைக்கான மிகவும் முக்கிய தருணம் ஆகும் என்று தெரிவித்த Microsoft நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவ அதிகாரி பிறையன் கீலே (Brian Kealey), பல்வேறு நிறுவனங்கள் மற்றும் எமது பங்காளர்களுடன் இணைந்து, மிகச் சிறந்த அனுபவத்தை இலங்கையின் வர்த்தகத் துறைக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார். 
 
இதன் மூலம், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கைகளில் புது நுட்பத்தை பெறுவது தொடர்பில் உலகுக்கு அனுபவத்தை வழங்கவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9965","attributes":{"alt":"","class":"media-image","height":"535","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
புதிய சந்தைக தொடர்பான தெற்காசியாவுக்கான சிரேஷ்ட சந்தைப்படுத்தல் மற்றும் நடவடிக்கைகள் அதிகாரியான ரெனா சாய் (Rena Chai) தெரிவிக்கையில், இலங்கையானது, தெற்காசியாவின் வளர்ச்சியடைந்து வரும் சந்தை வாய்ப்பைக் கொண்ட நாடாகும். இதனால், இலங்கையில் CIE வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் இந்நாட்டிலுள்ள தொழிலதிபர்கள் தொடக்கம் வர்த்தகத் துறையிலுள்ள அனைவரும் இவ்வனுபவத்தை, இலத்திரனியல் வழி மாற்றம் மற்றும் இலகுவான தொழில்சார் நடவடிக்கைகளை, கையடக்க தொலைபேசி முதல் மடி கணனி மற்றும் தனிநபர் கணனி வழியாக பெறலாம் என தெரிவித்தார்.
 
இவ்வறிமுக நிகழ்வின்போது, இது குறித்தான அனுபவத்தை அவர்கள் நேரடியாக வழங்கிக் காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...