அம்பலாங்கொடையில் 20 கிலோ ஹெரோயினுடன் கைது | தினகரன்

அம்பலாங்கொடையில் 20 கிலோ ஹெரோயினுடன் கைது

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 20 கிலோ ஹெரோயின் ஒரு கிலோ (1.1 கிலோ) கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் அம்பலாங்கொடையில் ஒருவர் கைது நேற்று (30) செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9961","attributes":{"alt":"","class":"media-image","height":"396","typeof":"foaf:Image","width":"673"}}]]

தென்மாகாணத்தில் மிகப் பெரும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இப்போதை பொருட்களின் பெறுமதி சுமார் ரூபா 12 கோடி எனவும், பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட மிகப் பெருந்தொகையான போதைப்பொருள் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9962","attributes":{"alt":"","class":"media-image","height":"474","typeof":"foaf:Image","width":"673"}}]]

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே குறித்த நபர் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...