யோஷித உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

கைதான யோஷித ராஜபக்ஷ, தன் கைவிலங்கை புகைப்பட ஊடகவியலாளருக்கு காண்பித்தபோது...
(படம்: இஷார கோடிகார)
விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிசையான CSN இன் மூலம், பண மோசடி, மற்றும் அரசாங்க சொத்துகளை பிழையாக கையாண்டமை தொடர்பில்  யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை (14 நாட்களுக்கு) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
யோஷித ராஜபக்‌ஷ, நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, சவித்ர கவிஷான் திஸாநாயக்க, அஷான் ரபிநாத் பெனாண்டோ ஆகியோரை, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, இன்று (30) கைது செய்து கடுவெலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.
 
இதன்போது, மஹிந்த ராஜபக்‌ஷ, கோத்தாபய ராஷபக்‌ஷ, பஷில் ராஜபக்‌ஷ, ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்  நீதிமன்றில் சமூகமளித்திருந்தனர்.
 
பலத்த பாதுகாப்புடன் குறித்த ஐவரும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டதோடு, நீதிமன்றத்தைச் சூழு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Add new comment

Or log in with...