யோஷித, நிஷாந்த, வெலிவிட்ட கைது (Update) | தினகரன்


யோஷித, நிஷாந்த, வெலிவிட்ட கைது (Update)

பதிப்பு 02
 
கைதான யோஷித ராஜபக்‌ஷவை பார்வையிட, அவரது தாய் ஷிரந்தி ராஷபக்‌ஷ மற்றும் அவரது சகோதரர் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி ஆகியோர் தங்களது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9953","attributes":{"alt":"","class":"media-image","height":"338","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
(பட உதவி: அஷாம் அமீன்)
 
இதேவேளை கடுவெலை நீதிமன்றத்தைச் சூழ விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9952","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
 

பதிப்பு 01

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஷபக்‌ஷ, நிஷாந்த ரணதுங்க ஆகியோரை நிதி மோசடி விசாரணை தொடர்பான பொலிஸ் பிரிவினர் (FCID) கைது செய்துள்ளனர்.
 
CSN தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே அத்தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரான ரொஹான் வெலிவிட்ட இன்று (30) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த மூவரும் இன்று (30) நிதி மோசடிப் பிரிவால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதோடு, கடற்படையில் உயர் பதவியில் இருக்கும் யோஷித ராஜபக்‌ஷ, கடற்படை தலைமையகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்தே அவர்கள் மூவரும கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த மூவரும் தற்போது, கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவற்காக அழைத்துச் செல்லப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Add new comment

Or log in with...