மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் | தினகரன்


மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (29) பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்.
 
ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், கட்டணம் செலுத்தாது சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தமை தொடர்பில், வாக்குமூலமொன்று வழங்கும் பொருட்டே அவர் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
 
இதன்போது, பிரதமர் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் தான் கவலையடைவதாகவும், ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் எனவும், அதுவே நல்லாட்சியின் அடையாளம் என அவர் ஊடகவியலாளரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...