குளவி கொட்டி 53 மாணவர்கள் வைத்தியசாலையில் | தினகரன்


குளவி கொட்டி 53 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்குள்ளான கட்டுகஸ்தோட்ட சாந்த அந்தோனி ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த 53 மாணவர்கள் நேற்று (27) கட்டுக்கஸ்தோட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கல்லூரியில் இடம் பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி நிகழ்வின் போது மாணவணொருவன் மரத்தலிருந்த குளவிக் கூட்டுக்கு கல்லொன்றை வீசியுள்ளார்.இதனால் கூட்டைவிட்டுக் கலைந்த குளவிகள் மாணவர்களைக் கொட்டியுளன. இதில் காயமடைந்த 53 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு சிலர் கடுமையாக பாதிக்கப்படடிருப்பதாக பொலிஸார் தெரிவுக்கும் அதேவேளை இவை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.ஏ.அமீனுல்லா 


Add new comment

Or log in with...