டைப் செய்யாமலேயே இணையம் செல்ல QR Reader | தினகரன்

டைப் செய்யாமலேயே இணையம் செல்ல QR Reader

QR CODE என்பது Bar Code ஐ போல உள்ள ஒரு Matrix barcode (Two-dimensional barcode) ஆகும். Quick Response Code என்பதன் சுருக்கமே QR CODE ஆகும். அதாவது விரைவாக தகவல்களை பெறக்கூடிய குறியீடு என்பதாகும். இந்த QR Scan CODE ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்து குறிப்பிட்ட தகவல்களை அதிலிருந்து பெறலாம். QR CODE இப்போது பல விடயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Business Card (Visiting Card), Brochure, Pamlet, Websites போன்றவற்றை விரைவாக பெற்றுக்கொள்ள QR Scan CODE பயன்படுத்தப்படுகிறது. QR Scan CODE சதுர வடிவில் மற்றும் கருப்பு, வெள்ளை நிறத்திலும் சில QR Scan CODE பல நிறங்களிலும் அமைந்திருக்கும்.

QR Scan CODE இன் பயன்கள்:

QR CODE-ஐ இப்போது பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நிறுவனங்களின் விவரங்கள், சேவைகள், முகவரிகள் போன்ற விவரங்களை அறிவதற்கும், நிறுவனப் பொருட்களின் விவரங்களை பற்றி அறிவதற்கும், நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களை அறிவதற்கும் மற்றும் பல தகவல்களை QR CODE ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்து அதன் தகவல்களை விரைவாக இணையத்தளத்தில் பெறலாம்.

QR Scan CODE உருவாக்கும் முறை:

QR CODE ஐ உருவாக்குவதற்காக நிறைய இணையத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான இணையத்தளங்கள் இலவசமாகவே QR CODE ஐ உருவாக்குகின்றன.

www.barcodesinc.com

www.qrstuff.com

Scan.me

www.the-qrcode-generator.com

goqr.me

போன்ற இணையத்தளங்களின் மூலம் QR CODE ஐ உருவாக்கலாம்.

நமக்கு தேவையான தகவல்களை இந்த இணையதளத்திற்கு வழங்கி QR CODE இனை GENERATOR இணையத்தளத்திலிருந்து QR CODE வடிவமாக பெறலாம். QR CODE இல் நாம் குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரி, தகவல்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறியீடாக அமைந்திருக்கும். இந்த QR CODE ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்யும்போது அதில் இடம்பெற்றுள்ள     தகவல்களை இணையத்தளத்தில் பெறலாம்.

QR CODE ஐ Scan செய்வது எப்படி?

QR CODE ஐ Scan செய்ய பல யுனெசழனைஇ யுppடந மென்பொருட்கள் உள்ளன. அதில் ஒன்றை மொபைலில் நிறுவிக்கொள்ள வேண்டும். பின்னர் QR CODE ஐ Scan செய்ய அம்மென்பொருளை திறந்து மொபைலில் உள்ள கெமரா மூலம் Scan செய்ய வேண்டிய QR CODE இற்கு முன்னால் பிடிக்க வேண்டும். இதன்போது அம்மென்பொருளால் அதில் உள்ள தகவல்களை காட்டும். QR CODE இல் இணையதளம் முகவரி இருந்தால் அந்த பக்கங்களை காட்டும், ஏதேனும் தகவல்கள் இருந்தால் அந்த தகவல்களை காட்டும், மின்னஞ்சல் இருந்தால் அந்த முகவரியை காட்டும். அதே போல் எந்த தகவல்கள் இருக்கிறதோ அதை மென்பொருட்களின் மூலம் Scan செய்து பெறலாம்.

QR CODE Reader

QR BARCODE ScanNER

QR Droid Code Scanner

QR Quick Scanner போன்ற மென்பொருட்கள் QR CODE ஐ Scan செய்ய பயன்படுகிறது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9856","attributes":{"alt":"","class":"media-image","height":"150","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 300px; height: 300px; float: left;","typeof":"foaf:Image","width":"150"}}]]

தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த QR Scan ஐ பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களின் விரலை விசைப்பலகையில் நோவிப்பதிலிருந்து தடுக்கலாம்.

(தரப்பட்டுள்ள QR CODE களை உங்கள் கையடக்க தொலைபேசிகளின் மூலம் Scan செய்து அதன் மூலம் தினகரன் செயலியை தரவிறக்குவதன் மூல் QR Code Reader செயலியின் அனுபவத்தைப் பெறுங்கள்)

 

(றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து)


Add new comment

Or log in with...