மொபைல் மூலம் ஆவணங்களின் Scan | தினகரன்

மொபைல் மூலம் ஆவணங்களின் Scan

உங்களிடம் காணப்படும் முக்கியமான ஆவணங்களை நீங்கள் எவ்வாறுதான் பத்திரப்படுத்தினாலும் சில வேளை அவை காணாமல் போகின்ற அல்லது ஏதோ ஒரு வகையில் பழுதடைந்து விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமையை சந்திக்க நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய ஆவணத்தின் மூலப்பிரதியைப் பெற நீங்கள் எங்கெங்கோவெல்லாம் அலைய வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறான சந்தரப்பத்தை தவிர்க்க அதன் இலத்திரனியல் பிரதியொன்றை கைவசம் வைத்துக்கொள்வது ஓரளவு உங்களுக்கு ஆறுதல் தரும் விடயமாக அமையலாம். அவசரமாக உங்களை ஒரு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கின்ற வேளையில் அது உதவியாக அமையலாம்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9854","attributes":{"alt":"","class":"media-image","height":"900","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 673px; height: 540px;","typeof":"foaf:Image","width":"1122"}}]]

இவ்வாறான நிலையில் இலத்திரனியல் ஆவணமொன்றை பெறுவதற்கு உங்களுக்கு Scanner ஒன்று அவசியமாகின்றது. இதற்காக நீங்கள் ஒரு Scanner இனை வாங்குவதென்பது அவசியமற்ற ஒரு விடயமாகும். காரணம் மிக அபூர்வமாகவே இந்த Scanner அவசியமாகின்றது. அத்துடன் கடைகளுக்கு ஏறி இறங்குவதும் சலிப்பைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ஆனால் இவ்வாறான ஒரு Scanner ஐ உங்கள் சட்டைப்பையில் வைத்துக்கொள்ள நான் உதவுகிறேன் என முன்வருகின்றது Genius Scan எனும் மென்பொருள். தற்போது காணப்படும் அனைத்து ஸ்மார்ட் தொலைபேசிகளிலும் நிறுவக்கூடிய இம்மென்பொருள். ஒரு சில நொடிகளில் உங்கள் ஆவணங்களை Scan செய்து Digital  வடிவில் பிரதியெடுத்து தருகின்றது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9853","attributes":{"alt":"","class":"media-image","height":"900","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"506"}}]]

தன் மூலம் உங்கள் சான்றிதழ்கள், சுயவிபரக்கோவைகள் போன்ற முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்தி உங்கள் தொலைபேசியில் சேமித்து, பின்னர் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மின்னஞ்சலாக அனுப்ப முடிவதோடு, கணனியொன்றில் தரவேற்றம் செய்து இறுவட்டில் பத்திரப்படுத்தவும் முடியும்.

இதன் மூலம் Scan செய்யப்படும் ஆவணங்கள் மிக தெளிவாகக் காணப்படுவதோடு, அதில் அமைந்துள்ள மேலதிக வசதிகள் அவற்றை நேர்த்தியான வகையில் பெற்றுக்கொள்வதற்கும் உதவுகின்றன.

மேலும் நீங்கள் Scan செய்யும் ஆவணங்களை நிறம் அல்லது         கறுப்பு - வெள்ளையாக பெறுதல், JPEG, PDF ஆகிய இலத்திரனியல் உருவில் பெறுதல் போன்ற மேலதிக செயற்பாடுகள் கொண்டதாக இம்மென்பொருள் அமைந்துள்ளது.

இதனை தரவிறக்கம் செய்ய...

அன்ரொய்ட் பாவனையாளர்கள்

goo.gl/Ydea1e எனும் முகவரிக்கும்

அப்பிள் பாவனையாளர்கள்

 goo.gl/WW67Su எனும் முகவரிக்கும் செல்லலாம்.

(றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து)

 


Add new comment

Or log in with...