வைரமுத்து மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி | தினகரன்

வைரமுத்து மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

சென்னையில் கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி மறைந்த முன்னாள் நீதியரசர் கைலாசம் நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, நீதிபதிகளை அவதூறாக பேசியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு விலைபோய் விடுகின்றனர்' என்று கூறியிருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திரைப்பட நிதிநிறுவன உரிமையாளர் முகன் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு குறித்து வைரமுத்து பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் வைரமுத்து. இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு வைரமுத்து மனு தாக்கல் செய்திருந்தார். வைரமுத்துவின் மனுவை ஏற்று அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.


Add new comment

Or log in with...