கிண்டலடித்தவர்கள் மீது ஸ்ரீ தேவி மகள் பாய்ச்சல் | தினகரன்


கிண்டலடித்தவர்கள் மீது ஸ்ரீ தேவி மகள் பாய்ச்சல்

ஸ்ரீ தேவி மகள் குஷி சமீபத்தில் தனது புகைப்படத்தை இணைய தளத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அவரது தோற்றம், உடை பற்றி சிலர் கிண்டல் செய்து மெசேஜ் போட்டனர். அவர்கள் மீது பாய்ந்திருக்கிறார் குஷி. இதுபற்றி அவர் கூறியது:எனக்கு நம்பிக்கையான, நல்லதொரு படத்தைத்தான் இணைய தளத்தில் வெளியிட்டேன். எனக்கென்று தனி பாணி இருக்கிறது. எனது தோற்றத்தை வெளிப்படுத்தவோ வேறு எதற்காகவோ புகைப்படத்தை வெளியிடவில்லை.

பலர் அதுபற்றி மனம் புண்படும்படி விமர்சித்திருக்கிறார்கள். எனது தோற்றம் முதல் உடை வரை கமென்ட் வெளியிட்டு அவமானப்படுத்தி இருக்கின்றனர். எனது வயிறு ஷேப் சரியில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

நீங்கள் அழகு என்று நினைக்கும் படியான தோற்றத்தில் நான் இல்லை என்று கூறுவதெல்லாம் உங்கள் எண்ணப்படி எவ்வளவு அசிங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அழகுதான். மற்றவர்களை ஊக்கப்படுத்துவதுபோன்ற காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது? உங்கள் அழகை நீங்கள் சகித்துக்கொள்ளும்போது என் அழகை என்னால் சகித்துக்கொள்ள முடியும்.

மற்றவர்களை நீங்கள் கிண்டல் செய்யும் வேளையில், ஒருநாள் நீங்கள் அந்த மாயத்தோற்றத்திலிருந்து காணாமல் போய்விடுவீர்கள். எனது அனுபவத்தில் இதெல்லாம் மனதை காயப்படுத்தும் என்பது எனக்கு தெரியும். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவோம். எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள்.இவ்வாறு குஷி கூறி உள்ளார். 


Add new comment

Or log in with...