அசினுக்கு திருமணம் நடந்தது | தினகரன்


அசினுக்கு திருமணம் நடந்தது

அசினின் திருமணம் நேற்று (19) டெல்லியில் நடந்தது.
 
மைக்ரோ மெக்ஸ் கையடக்க தொலைபேசி நிறுவனத்தின் தொழிலதிபரான ராகுல் சர்மாவுடன் அசின் திருமண பந்தத்தில் இணைந்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9640","attributes":{"alt":"","class":"media-image","height":"815","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
கிறிஸ்தவரான அசின், அவரது மத முறைப்படி, காலையில் திருமணம் இடம்பெற்றதோடு, மாலையில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9641","attributes":{"alt":"","class":"media-image","height":"385","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேரளவில் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
1985 இல் (1985.10.26) பிறந்த அசின், 1975 இல் பிறந்த ராஹுலை மணந்ததன் மூலம் தம்பதியினர் இருவருக்கும் 10 வருட வயது வித்தியாசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9642","attributes":{"alt":"","class":"media-image","height":"990","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
திருமண வரவேற்பு, நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (23) மும்பையில் உள்ள ஹோட்டலில் இடம்பெறவுள்ளதோடு, 
இதில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிக, நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
கேரளாவை சேர்ந்த அசின், கடந்த 2004இல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஒப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.
 
கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த அவரது கஜினி, தசாவதாரம், சிவகாசி, வரலாறு, போக்கிரி, காவலன் போன்றவை அதிக வெற்றியைக் கொடுத்த முக்கிய படங்களாகும்.

Add new comment

Or log in with...