அதிகரித்த பாண் விலை மீண்டும் குறைப்பு | தினகரன்

அதிகரித்த பாண் விலை மீண்டும் குறைப்பு

 ஷம்ஸ் பாஹிம்

 

ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பாண் மற்றும் கோதுமை மா உற்பத்திப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

தேசத்தை கட்டியெழுப்பும் வரி மற்றும் வெட் வரி என்பன 2 முதல் 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டதையடுத்து பாண் மற்றும் கோதுமை மா உற்பத்திகளின் விலைகளை ஒரு ரூபா வினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் முடிவு செய்தது. ஆனால் மேற்படி வரிகளை செயற்படுத்துவதை நிதி அமைச்சு தற்காலிகமாக இடை நிறுத்தியதையடுத்து மீண்டும் பாண் விலைகளை குறைக்க முடிவு செய்ததாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் ஜெயவர்தன தெரிவித்தார்.

நேற்று(15) நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருந்தது.

வரவு செலவுத் திட்டத்தினூடாக அதிகாரிக்கப்பட்ட வெட் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பவற்றை முன்னெடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டே இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்


Add new comment

Or log in with...