அடுக்கடுக்காய் தொழில்நுட்பங்களுடன் iPhone 6s

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள் இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் போன், அப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான நவீனத்துவம் மிக்க மிகப் புதிய பதிப்பாகும்.

இனி அதிலுள்ள விசேட அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்த இரு ஸ்மார்ட் போன்களும் Apple A9 Dual Core Processor ஜ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது முன்னைய பதிப்புக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட A9 Processor ஐ விட 70 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறைக்கான (2G) Fingerprint Scanne ஆனது முன்னைய ஐபோன் ஸ்மார்ட் சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட Fingerprint Scanner ஐ விட இரு மடங்கு வேகமாக செயற்படக்கூடியதாகும்.

இரு ஸ்மர்ரட் போன்களிலும் 2GB RAM காணப்படுவதோடு, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையிலான 16GB, 64GB, 128GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளன.

கெமரா

இதன் கெமராவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மோற்கொள்ளப்பட்டுள்ளன. சிறந்த செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் 5 MP தெளிவுத் திறன் கொண்ட முற்புற கெமரா அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதன் முற்புற கெமரா மூலம் புகைப்படங்கள் பிடிக்கப்படும் போது அதன் திரையில் இருந்து 3 மடங்கு ஒளி ஏற்படுத்தப்பட்டு, பிளாசர் போன்ற செயற்பாட்டை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. (Screen Flash)

மேலும் முற்புற கெமரா முலம் Panorama முறையிலான செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிரதான பிற்புற கெமராவானது 12 MP தெளிவுத்திறனை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முலம் 3840 x 2160 Resolution இல் அமைந்த 4K துல்லியத்தன்மை கொண்ட வீடியோ கோப்புகளை பதிவு செய்ய முடியும்.

இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அப்பிள் ஜபோன்களானது 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனையே கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் Live Photos எனும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை, ஒரு சில செக்கன்களுக்கு  சலனத்தைக் காட்டும் புகைப்படங்களாக பிடிக்கலாம்.

இதன் போது ஒலியும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இது ஒரு சொற்ப நேர வீடியோ போன்றதாக அமைந்திருக்கும்.

திரை

ஐபோன் 6 எஸ் ஸ்மார்ட் போன் இல் 1334 x 750 Resolution இல் அமைந்த 4.7 அங்குல திரையும், ஐபோன் 6 எஸ் ப்ளஸ் ஸ்மர்ரட் போனில் 1920x1080 Resolution இல் அமைந்த 5.5 அங்குல திரையும் காணப்படுகின்றது.

இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் முப்பரிணமாண தொடுகை (3D Touch) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியின் மூலம் கையடக் தொலைபேசியிலுள்ள குறிப்பிட்ட ஒரு அப்ளிபிகேஷன் ஒன்றை பலமாக அழுத்தும் போது தோன்றும் சாளரத்தின் மூலம் அந்த    செயலியினுள் நுழைந்து அல்லது திறந்து பெறக்கூடிய பல்வேறு வசதிகளை நேரடியாக அதே திரையிலிருந்தே பெற முடியும் எனும் வித்தியாசமானதும் சிறப்புமிக்கதுமான குறுக்குவழி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக கெமரா அப்ளிகேஷனை பலமாக அழுத்தும் போது  தோன்றும் சாளரத்தின மூலமாக வீடீயோ கோப்புகளை நேரடியாக அதே திரையில் பதிவு செய்வதற்கும் செல்பி புகைப்படங்களை எடுக்கவும் மெதுவான சலன வீடியோ காட்சிகளை பதிவு செய்யவும் முடியும். இவ்வாறு அழுத்தும் போது சாதாரணமாக அழுத்தும்போதான Haptic Feedback  அதிர்விலும் வித்தியாசமான அதிர்வு ஏற்படுத்தப்பட்டு அதனை இனங்காட்டுகின்றது.

இயங்குதளம்

iOS 9 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இத்தொலைபேசிகளில், மேம்படுத்தப்பட்ட அப்பிள் தொலைபேசிக்கே உரித்தான பல்வேறு செயலிகள் நிறுவப்பட்டுள்ளன.

வடிவமைப்பு

ஐபோன் 6 எஸ் ஆனது 7.1 மில்லி மீற்றர் தடிப்பையும் 143 கிராம் எடையையும் கொண்டுள்ளதோடு, ஐபோன் 6 எஸ் பிளஸ் 7.3 மில்லி மீற்றர் தடிப்பையும் 192 கிராம் எடையையும் கொண்டுள்ளது. மிகவும் வலிமையான அலுமீனியம் (7000 Series Aluminium) உலோக சுற்றுப்புறத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே வெளிவந்த ஐபோன் 6 தொலைபேசியில்  காணப்பட்ட வளையும் பிரச்சினைகள், இதில் காணப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(பட உதவி, தகவல்: றிஹான் சேகு முகைதீன்)

(றிஸ்வான் சேகு முகைதீன் - Hi டெக் பக்கத்திலிருந்து)


Add new comment

Or log in with...