செயலியின் வாயை மூடும் ShutApp | தினகரன்

செயலியின் வாயை மூடும் ShutApp

என்னதான் பல்வேறு விதமான அம்சங்களை உள்ளடக்கியதாக, பார்வைக்கும், பயன்பாட்டிற்கும் இலகுவான வகையில் ஸ்மார்ட் போன்கள் வந்த போதிலும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இருக்கும் பொதுவான பிரச்சினையே அதன் மின்கலத்தின் ஆயுள்.

கையடக்க தொலைபேசிகள் ஆரம்பத்தில் செங்கல் அளவி வந்த போதிலும் அதில் இந்த பெட்டரி பிரச்சினை காணப்படவில்லை.

அவை கைக்குள்ளேயே அடக்க நினைக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட முதல் பிரச்சினை அதன் மின்கலம்.

தடிப்பம் குறைந்த போன்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தும் கையடக்க தொலைபேசி நிறுவனங்களால் இதற்கு இன்னும் முழுமையான தீர்வை வழங்க முடியவில்லை. மாறாக மின்னேற்றப்பட்ட கையடக்க மின்கலத்தையே அவர்களால் தற்போது தயாரிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் பின்புல மென்பொருட்களாலேயே பெட்டரியின் சக்தி மிக விரைவில் தீர்ந்துவிடுகின்றது.

இருப்பினும் சில வழிகுமசஸறகசல்ள கடைபிடிப்பதன் மூலம் அதன் பெட்டரியிண் சக்தியை நீணட நேரத்திற்கு சேமித்துக்கொள்ள முடியும்.

அவ்வாறான வழிகளில் ஒன்றே பெட்டரியின் சக்தியை சேமிக்கும் வகையிலான செயலிகசலள போனில் நிறுவி பயன்படுத்தலாம்.

ஆயினும் பெரும்பாலான செயலிகள் பெட்டரியின் சக்தியை சேமிப்பதை விடுத்து அதனை விரயமாக்குவதோடு மட்டுமல்லாது, பின்புலத்தில் இயங்கியவாறு, விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற நொட்டிபிகேஷன்களை (Notifications) வழங்கி, தொல்லையையும் வழங்கி வருகின்றன.

அத்துடன், அந்த செயலிகளால் பின்புலத்தில' இயங்கும் செயலிகளின் செயற்பாடு தடை செய்யப்பட்ட போதிலும் அவை தற்காலிகமானதாகவே காணப்படுகின்றன. காரணம், குறுகிய நேரத்தில், அவை பழையபடி இயங்க ஆரம்பித்து விடுகின்றன.

ஆயினும் சட்அப் எனும் இந்த செயலியை பயன்படுத்தி எமது ஸ்மார்ட் போன்களின் மின்கலத்தை நீண்ட நேரத்திற்கு சேமிக்கலாம்.

இது, வட்ஸ்அப் எனும் பெயரை தழுவி வந்ததோ தெரியவில்லை.

ஆயினும், இது பின்புலத்தில் இயங்கும் செயலிகளிண் செயற்பாட்டை முற்றாக தடை செய்து பின்புலத்தில் இயங்வதிலிருந்தும் பிவர செய்யரது எனவே தடை செய்து, இணையத்துடண் தானாக தொடர்புபடுவதிலிருந்தும் தடுத்து பெட்டரியை நீணட நேரத்திற்கு சேமிக்க உதவுகின்றது.

பயன்படுத்துவதற்கு இலகுவான இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி, Setting பகுதியில் காணப்படும் Accessibility யில் இருக்கும் Services எனும் பகுதியில், குறித்த மென்பொருளின் செயற்பாட்டை செயற்படுத்த வேண்டும்.

இதற்காக நீங்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள தேவையில்லை. சட்அப்| ஐ நிறுவியதும், குறித்த பகுதிக்கு, அது உங்களை அழைத்துச் செல்லும்.

பின் இநத செயலியில் காணப்படும் Shut (மூடு) என்பதை அழுத்தியதும் குறித்த ஸ்மார்ட் போனின் பின்புலத்தில் தேவையற்ற் வகையில் இயங்கும் அனைத்து செயலிகளும் நிறுத்தப்பட்டு, மீள இயங்க முடியாதவகையில் தடை செய்யப்படும்.

இவ்வாறு நாம் தடைசெய்யும் செயலிகளில் இருந்து நொட்டிபிகேஷன் எதுவும் தோன்றாதவாறு தடுக்கப்பட்ட போதிலும், செய்தி பரிமாற்றங்கள் தொடர்பான வைபர் வட்ஸ்அப் போன்ற செயலிகள் மற்றும் உங்களுக்கு அவசியமான செயலிகளின் நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாதிருக்கவும் அவற்றின் வழமையான செயற்பாட்டிற்கும் இட்டுச் செல்ல, அவற்றை Whitelist எனும் பகுதியில் இணைத்துக் கொள்ளலாம்.

இதற்கு, செயலியின் இடது மூலையிலுள்ள மெனுவை அழுத்தி அதில் Whitelist என்பதை தெரிவு செய்து குறிப்பிட்ட செயலிகளை உள்ளிட்டுக் கொள்ளலாம்.

அத்துடன், தேவையற்ற வகையில் பின்புலத்தில் செயலிகள் இயங்குவதை தெரியப்படுத்தும் வகையில், மொபைலின் திரையை மறைக்காத வகையில் திரையின் ஒதுக்குப்புறமாக ஒரு சிறிய வட்ட வடிவில் சட்அப் செயலி அத்தகவலை வழங்கும். இவ்வாறு பின்புல செயலிகள்  அதிகரிக்கும் போது சட் என்பதை கிளிக் செய்து அவற்றை தடுக்கலாம்.

இதற்கு மேலதிகமாக உங்கள் சட்டைப் பையில் ஸ்மார்ட் போனை இடும்போது, தேவையற்ற செயலிகள் இயங்குவதை தானாக அவதானித்து தடைசெய்யும் வசதியும் இதில் உண்டு.

ஆயினும் இவ்வசதியை பெற்றுக்கொள்ள   கட்டணம் செலுத்த வேண்டும் என  குறிப்பிடப்பட்ட போதிலும், அதில் தரப்பட்டுள்ள Invite என்பதை கிளிக் செய்து நண்பர்கள் மூவருக்கு அதனை அறிமுகப்படுத்துவதன் மூலம் கட்டணம் செலுத்துவதிலிருந்து  தவிர்ந்து குறித்த பதிப்பை பெறலாம்.

குறித்த செயலியை தரவிறக்க https://goo.gl/24wbqf

 

(றிஸ்வான் சேகு முகைதீன் - Hi டெக் பக்கத்திலிருந்து)


Add new comment

Or log in with...