பாணின் விலை ரூபா 1 இனால் அதிகரிப்பு | தினகரன்

பாணின் விலை ரூபா 1 இனால் அதிகரிப்பு

பாண் ஒன்றின் விலையை ரூபா ஒன்றினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
இன்று (13) நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
 
நேற்று (12) இடம்பெற்ற சங்கத்தின் கலந்துரையாடலை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
அதன்படி, ரூபா 54ஆக இருந்த 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூபா 55 ஆக அதிகரித்துள்ளது.
 
ரூபா 5 இனால் பாண் உள்ளிட்ட பல்வேறு பேக்கரி தயாரிப்புகளின் விலை அதிகரிக்கப்படும் என அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வரவு செலவுத் திட்டத்தில், 2% ஆக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி 4% அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.

Add new comment

Or log in with...