பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு? | தினகரன்

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு?

சகல விதமான பேக்கரி தயாரிப்புகளினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
 
பட்ஜட்டில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் காரணமாக பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, இவ்விலை அதிகரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
 
அதன் அடிப்படையில் பாண் ஒன்றின் விலை ரூபா. 5 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கப்படுகின்றது. 
 
அது தவிர ஏனைய பேக்கரி தயாரிப்புகளினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்விடயம் குறித்து வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஆயினும், இது குறித்த அரசாங்க தரப்பிலிருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆயினும், உரிய அனுமதியைப் பெறாது விலைகள் அதிகரிக்கப்படுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...