பிரவுண்ஸ்விக் தோட்டத்தில் தீ; 16 குடியிருப்புகள் நாசம்

மஸ்கெலியா பிரவுண்ஸ்விக் தோட்டத்தில் இன்று (09) பிற்பகல்  ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் எரிந்து சாம்பராகியுள்ளன.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9245","attributes":{"alt":"","class":"media-image","height":"390","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்துள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9246","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
தீ ஏற்பட்ட போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தோட்ட பொது மக்கள் முயற்சித்த போதும் பயனளிக்கவில்லை. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9247","attributes":{"alt":"","class":"media-image","height":"390","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இதனையடுத்து மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ ஆகிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சியிகளை மேற்கொண்டனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9248","attributes":{"alt":"","class":"media-image","height":"390","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இதன்போது, குறித்த வீடுகளிலிருந்த பெருமளவான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9251","attributes":{"alt":"","class":"media-image","height":"366","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9249","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
குறித்தத வீடுகளில் இரருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9250","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என  மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9252","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
பொலிஸார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(க.கிஷாந்தன்)

Add new comment

Or log in with...