தீ மூட்டிக்கொண்ட தரம் 9 மாணவி மரணம் | தினகரன்

தீ மூட்டிக்கொண்ட தரம் 9 மாணவி மரணம்

சக மாணவிகளால், பரீட்சையில் சித்தியடைய மாட்டாய் அடுத்தாண்டும் ஒரே வகுப்பிலேயே மீண்டும் படிக்கப் போகின்றாய் என கிண்டல் செய்ததை தாங்க முடியாத மாணவி தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த மாணவி நேற்று (21) மரணமடைந்துள்ளார்.
 
இணுவில் மத்திய கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்ற மாணவியின் இச்செயலால் கோண்டாவில் பிரதேசத்தில் பெரும் அதிர்வை எற்படுத்தியுள்ளது.
 
கோண்டாவில் மேற்கு கோண்டாவிலை சேர்ந்த மாணவி சுதாகரன் சுதாஜினி (14) பாடசாலை விடுமுறை தினமான கடந்த டிசம்பர் 05 ம் திகதி நள்ளிரவு வீட்டில் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
 
இந்நிலையில் பெற்றோர்கள் அவரை காப்பாற்றும் முகமாக தீயை அணைத்து பாரிய எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளனர்.
 
ஆயினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில குறித்த மாணவி நேற்று (21) மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.
 
இவருடைய மரண விசாரனையை நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
 
(மல்லாகம் குறூப் நிருபர்)

Add new comment

Or log in with...