தங்க பிஸ்கட்டுகளுடன் அமைச்சு அதிகாரி கைது | தினகரன்

தங்க பிஸ்கட்டுகளுடன் அமைச்சு அதிகாரி கைது

நான்கு தங்க பிஸ்கட்டுகளுடன் பிரபல அமைச்சின் இணைப்புச் செயலாளர் (42) ஒருவர் இன்று (22) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 
உடலில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், 100 கிராம்களைக் கொண்ட தங்க பிஸ்கட்கள் நான்கை கடத்த முற்பட்ட வேளையிலேயே அவரை கைது செய்துள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். 
 
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் வந்த இவர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 

Add new comment

Or log in with...