அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | தினகரன்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கான உர மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும் நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறும் கோரி வெள்ளிக்கிழமை (18) அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கல்லோயா விவசாய ஒருங்கிணைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நெற் செய்கை விவசாயிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த உரமானியத்தை தொடர்ந்து அதே முறையில் வழங்குமாறும். நெல்லுக்கான உத்தரவாத விலையை தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டமைக்கு அமைய தொடர்ந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

காசு வேண்டாம், உரத்தைக் கொடு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயத் துறையை அபிவிருத்தி செய், விவசாயிகளுக்கான காப்புறுதியையும், விவசாயிகள் ஓய்வூதியத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(அம்பாறை சுழற்சி நிருபர்) 


Add new comment

Or log in with...