லிந்துலையில் பஸ் விபத்து ஒருவர் பலி; 40 பேர் காயம் | தினகரன்

லிந்துலையில் பஸ் விபத்து ஒருவர் பலி; 40 பேர் காயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை சந்தியிலிருந்து டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மட்டுக்கலை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் 40 பயணிகள் பலத்த காயங்களுக்கும், சிறு காயங்களுக்கும் உட்பட்ட நிலையில் லிந்துலை ஆதார வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் சுமார் 50 அடி பள்ளத்திற்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் சேவையாளர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

க.கிஷாந்தன், கொட்டகலை, நுவரெலிய தினகரன் நிருபர்கள் 


Add new comment

Or log in with...