ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு (Update) | தினகரன்


ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு (Update)

பதிப்பு 02

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றிற்கு ஆஜரான ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதன்போது, அவருக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அதில் ஒரு வழக்கிற்காக, ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகள் மற்றும் ரூபா 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கை எதிர்வரும் 2016 ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய தெரிவித்தார்.

 
பதிப்பு 01

 
கடந்த 2010-2014 காலப்பகுதிக்கான தனது சொத்து விபரத்தை வெளியிட மறுத்ததன் காரணமாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தனது சொத்துகள், பொறுப்புகள் குறித்தான விபரத்தை வெளியிடாமல் மறுக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...