சுற்றுலா வந்த பெண்கள் நீரில் மூழ்கினர்

பதிப்பு 02

இரம்பொடை ஒயாவில் நீரிழ் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்களின் சடலங்களை இன்று (14) 11.00 மணியளவில் கொத்மலை ஒயாவில் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"8242","attributes":{"alt":"","class":"media-image","height":"488","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
கண்டெடுக்கப்பட்ட சடலம் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைகக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 
 
பதிப்பு 01

ரம்பொடை ஒயாவில் நீராடச் சென்ற இளம் பெண்கள் இருவர் நீரில் அடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று (13) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பாக தெரியவருவதாவது, டி. நிர்மலா மானெல் வயது 28, ஆர்.எஜ்.ஷகீலா நிமாலி வயது 33 ஆகிய இருவருமே நீரிழ் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறிய கிலேத்தேவ, முகுனு வட்டவல, அலாவத்தை, புத்தளம் என்ற விலாசத்தை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 

புத்தளம் அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர் வரும் வழியில் ரம்பொடை ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர். குறித்த குழுவினரில் அநேகமானவர்கள் நீராடிய பின்பு வெளியேறியுள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் நீண்ட நேரமாக நீராடிக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது திடீரென நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

[[{"type":"media","view_mode":"media_large","fid":"8239","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"width: 300px; height: 341px;","typeof":"foaf:Image","width":"422"}}]]

டி. நிர்மலா மானெல்

[[{"type":"media","view_mode":"media_large","fid":"8240","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"width: 300px; height: 314px;","typeof":"foaf:Image","width":"458"}}]]

ஷகீலா நிமாலி

 
 
இவருடன் வருகை தந்த அனைவரும் இவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி செய்துள்ளபோதும் நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக இவர்களை காப்பாற்ற முடியவில்லை இவர்கள் இருவரும் ரம்பொடை ஒயாவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் இருவரும் இன்று (14) காலை வரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களை பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.
 
(நுவரெலியா தினகரன் நிருபர்)

Add new comment

Or log in with...