உணர்வுமிக்க தங்க மகனாக வரும் தனுஷ்

பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிப் படங்கள் பலவற்றை தந்த தனுஷ், முதன் முறையாக முழுக்கு முழுக்க உணர்வை மாத்திரம் மையப்படுத்தி படம் ஒன்றை வெளியிடவுள்ளார். 
 
வேலையில்லா பட்டதாரி (VIP) படத்தில் இடம்பெற்ற அம்மா தொடர்பான உணர்வுபூர்வமான காட்சி மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தமையும், அதில் இடம்பெற்ற அம்மா... அம்மா... என்ற பாடலும் புகழ்பெற்றமையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பலாம்.
 
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு நடித்து முடிக்கப்பட்ட படம் 'தங்க மகன்' என பெயரிடப்பட்டு வெளிவரவுள்ளது.
 
எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இப்படத்தில், இதுவரை தனுஷ் நடித்திராத அளவில் அதிக உணர்வுபூர்வமான காட்சிகளில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்படுவதோடு, வேலையில்லா பட்டதாரி படம் போன்று, இந்தப் படமும் தனக்கு நல்ல பெருமையைத் தேடித் தரும் என தனுஷ் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வேலையியில்லா பட்டதாரி படத்தை இயக்கிய இயக்குனர், வேல்தாஜ் இப்படத்தையும் இயக்கியுள்ளதோடு, தனுஷின் படங்களின் இசையமைப்பின் ஏக உரிமையாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்,
 
இப்டத்தில் தனுஷுடன் சமந்தா, எமிஜெக்சன் நடித்துள்ளனர்.
 
இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் எடுக்கப்பட்டு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
உணர்வுகளை மையமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான தனுஷின் பெற்றோர்களாக இயக்குனர் கே.எஸ். ரவிகுமரர் மற்றும் ராதிகா சரத்குமார் நடித்திருக்கின்றனர்.
 
அப்பாவுக்கும் ஏற்படும் கெட்ட பெயரிலிருந்து அவரை விடுவிக்கும் தங்க மகனாக தனுஷ் சித்தரிக்கப்படுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add new comment

Or log in with...