சீபா: இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகாது

 எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

எக்காரணம் கொண்டும் அரசாங்கம் இந்தியாவுடன் ‘சீபா’ ஒப்பந்தத்தை கைச்சாத்திடாது.பொருளாதார, தொழில்நுட்பத்துறை சார்ந்த நாட்டுக்கு சாதகமான ஒப்பந்தம்​ ஒன்றையே கைச்சாத்திடவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இவ்வாறான ஒப்பந்தங்களை கைச்சாத்திடவிருப்பதாகத் தெரிவித்த அவர், கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிபோலன்றி தாம் சகல தரப்பினருடனும்பேச்சு நடத்தி இணக்கப்பாட்டு னயே அவர் இதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சீபா ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்‌ஷ ரெஜிமென்டில் அடிமைபோல் செயற்படும் மருத்துவ சங்கத்தில் உயர்பதவி வகிக்கும் சிலர் சீபா ஒப்பந்தம் குறித்து பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டுக்குப் பாதகமான சீபா ஒப்பந்தம் முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்தியாவுடன் செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தின் ஊடாக பல இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. நாட்டுக்கு சாதகமாக ஏதாவது கிடைப்பதை விரும்பாதவர்களே இதனை எதிர்ப்பதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற புரட்சியை மாற்றி எதிர்புரட்சியொன்றை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர், குறுகிய நோக்கத்துடன் செயற்படாமல் நாட்டு நலனுக்காக செயற்படுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஒரு வருடத்துக்கு முன்னர்வரை நாடு எந்தப் பாதையில் சென்றது என்பதை அனைவரும் அறிவர். ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற புரட்சியினூடாக நாட்டிலுள்ள முற்போக்கும் தேசப்பற்றும் நிறைந்த மக்கள் அந்த பயணத்தை மாற்றியமைத்தார்கள். மீண்டும் சுதந்திரமாக மூச்சுவிடவும், சுதந்திரமாக கருத்து வெளியிடவும், சுநத்திரமாக செயற்படவும் தற்பொழுது அவகாசம் இருக்கிறது. சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். குரோத ஆட்சியில் இருந்து கருணை ஆட்சியை நோக்கிப் பயணித்து வருகிறோம். ஆனால் இந்த மாற்றத்தை விரும்பாத சிலரும் இருக்கவே செய்கின்றனர். தங்களுடைய நிறைகிறாதன்களால் நாடு நாசமானாலும் பரவாயில்லை என்று கரு்ததும் இவர்கள் எதிர்ப்புரட்சி ஊடாக நாட்டை மீண்டும் புதைகுழியில் உள்ள முயல்கின்றனர். பல்வேறு வருவங்களில் எதிர்ப்புரட்சியை ஏற்படுத்த ஒவ்வொரு இடத்திலும் தலைதூக்குகின்றனர்.

'சீபா' ஒப்பந்தத்தை வேறு பெயரில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய அரசாங்கம் தயாராவதாக அரச மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த சீபா ஒப்பந்தத்தினூடாக இந்தியாவில் வேலையற்றவர்களுக்கு இலங்கையில் தொழில்புரிய சந்தர்ப்பம் கிடைக்க இருப்பதாகவும் இலங்கையரின் தொழில்வாய்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்புவாய்ந்த தொழிற்சங்கமான அரச மருத்துவர்கள் சங்கம் இவ்வாறு பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களையும் தமது உறுப்பினர்களையும் ஏமாற்றுவதை வனமையாக்க் கண்டிக்கறோம்.

இந்தியாவுடன் கைச்சாத்திடவிருக்கும் உத்தேச பொருளாதார தொழில்நுட்ப ஒத்பதுழைப்பு ஒப்பந்தம் குறித்து சகல தரப்பினரையும் அறிவூட்டியிருக்கிறோம். அமைச்சர் மலிச் சமரவிக்கரம, தொழிற்சங்கங்களுடன் பேச்சுநடத்தியுள்ளார். இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் சங்கம் இவ்வாறு வௌிப்படையாக செயற்படுவது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்திருந்தது. அங்கு அவ்வாறு குறிப்பிட்ட மருத்துவர் சங்கம் வெளியில் வந்து குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. ஒப்பந்தம் தாயரிக்கும் குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவது குறித்தே இது 'சீபா' ஒப்பந்தத்தைவிட மாற்றமானது என்றோ தொழிற்சங்க சேவைகளுக்காக புதிய ஒப்பந்தத்தினூடாக அவகாம் வழங்கப்படவில் என்றோ இவர்கள் சொல்வதில்லை.

ராஜபக்‌ஷ ஆட்சியை மாற்றுவதற்கு பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை பொது வோட்பாளராக நியமித்தபோதுபல்வேறு தொழிசார் அமைப்பினர் உயரை பணயம் வைத்து எம்முடன் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடையே மருத்துவர்கள் பலரும் அடங்குவர். ஆனால் மருத்துவர் சங்கம் உயர் பதவி வகிக்கும் டொக்டர் பாதெனிய அடங்கலானவர்கள் ஜனவரி 8 புரட்சிக்கு பங்களிக்கவில்லை. அவர்கள் ராஜபக்‌ஷ ஆட்சியை பாதுகாக்கவே செயற்பட்டனர்.

சீபா ஒப்பந்தத்திற்கு ராஜபக்‌ஷ அரசாங்கம் உடன்பாடு வழங்கியிருந்தது. ஆனால் சீபா ஒப்பந்தத்திலுள்ள சில நிபந்தனைகள் எமது நாட்டு தொழில்துறையினருக்கு பாதகமானது என்பதை தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டினோம். நாம் ஆட்சிக்கு வந்தால் சீபா ஒப்பந்தத்தை கைச்சாத்திடமாட்டோம் எனவும் அதற்கு பதிலாக வேறு ஒப்பந்தம் தயாரிப்பதாகவும் நாம் அறிவித்தோம். இந்த பேச்சுவார்த்தையின் போது சீபாவுக்கு பதிலாக பொருளாதார தொழில்நுட்ப ஒப்பந்தம் கைச்சாத்திட முடிவு செய்யப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டது. இந்த இந்திய விஜயத்தின் போதும் இதுபற்றி ஆராயப்பட்டது. எமது அரசாங்கம் எக்காரணம் கொண்டும் சீபா ஒப்பந்தம் கைச்சாத்திடாது. வேறு பெயரிலும் எதனையும் கைச்சாத்திட மாட்டோம். ராஜபக்‌ஷ ஆட்சியில் உள்ளடக்கப்பட்ட சரத்துக்களை நாம் ஏற்கவில்லை. இந்த நிலையில் மருத்வர் சங்கத்தின் உயர் பதவி வகிக்கும் சிலர் தொடர்ந்தும் ராஜபக்‌ஷ ரெஜிமென்டின் அடிமைகளாக இருப்பதாலேயே இவ்வாறு பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

ராஜபக்‌ஷ ரெஜிமெண்ட் காலத்தில் சீபா ஒப்பந்தம் தயாரிக்கப்பட்ட போது இவர்கள் ஒரு போதும் எதிர்க்கவில்லை. தொழிற் சேவைகள் தொடர்பில் இந்திய நட்டவர்களுக்கு இடமளிக்கும் சரத்தை நீக்க கோரவில்லை. போராடவோ, வேலைநிறுத்தம் செய்யவோ இல்லை. இன்று அதனை எதிரப்பதன் மூலம் இவர்களின் அடிமைத்தனம் தெளிவாகிறது.

எமது நாட்டுக்கு பாதகமான சீபா ஒப்பந்தம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. நாம் நாட்ுடக்கு சாதகமான ஒப்பந்தமொன்றையே கைச்சாத்திட இருக்கிறோம். அதில் பொருளாதார தொழில்நுட்ப துறை சார்ந்த சரத்துக்கள் மட்டுமே உள்ளடக்கியுள்ளோம். இந்தியாவுடன் மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் இவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறோம். இந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திட முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுநடத்த இருக்கிறோம். கட்சித் தலைவர்களையும் அறிவூட்டுவோம். அமைச்சரவை அனுமதியுடனே இதனை மேற்கொள்ள இருப்பதோடு சகல விடயங்களையும் பாராளுமன்றத்திக்கு அறிவிப்போம். பெரும்பான்மையானவர்களின் உடன்பாட்டுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதுதான் எமது அரசாங்கத்திற்கும் ராஜபக்‌ஷ ரெஜிமென்டுக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

நாம் திருட்டுதனமாக எதனையும் செய்யப் போவதில்லை. இந்த ஒப்பந்தத்தினூடாக பல இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில், வருமான வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. நாடு முகங்கொடுக்கும் வேலையில்லா பிரச்சினைக்கு இதனூடாக சிறந்த தீர்வு கிடைக்கும்

எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைப்பதை வரும்பாதவர்களே இந்த சர்வதேச ஒப்பந்தத்தை குழப்ப முயற்சிசெய்கின்றனர். நாட்டுக்கு சாதகமான ஏதும் நடப்பதை விரும்பாதவர்களை இதனை எதிர்க்கின்றனர். நாட்டுக்கு சாதகமான புதிய பயணம் ஒன்று செல்வதை ராஜபக்‌ஷ ரெஜிமென்டுக்காக வக்காளத்தை வாங்கும் சில டொக்டர்களுக்கு தேவையில்லை. தமது அபிலாஷைகளை மீண்டும் நிறைவேற்றுவதே இவர்களின் நோக்கமாகும்.

டிசம்பர் 3ஆம் திகதி இடம்பெற்ற மருத்துவர்களின் வேலைநிறுத்தம் இதனை தெளிவாக நிரூபிக்கிறது. ஊழியர் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றை மத்திய வங்கியிலிருந்து அகற்றப்போவதாக பொய்கூறி வேலைநிறுத்தம் புரிகின்றனர். ஊழியர்சேமலாப நிதியத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுத்திராத நிலையிலும் வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய முடிவு செய்யப்படாத நிலையிலும் இவர்கள் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டம் நடத்துகின்றனர். சீபா ஒப்பந்தமொன்று இல்லாத நிலையில் அவ்வாறு ஒன்று இருப்பதாக பொய் கூறி நாட்டை குழப்ப முயல்கின்றனர். 2008 மார் 31 முதல் டிசம்பர் 15 வரையான காலத்தில் ராஜபக்‌ஷ ரெஜிமென்ட் அரச ஊழியர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை முழுமையாக இரத்துச் செய்தது. அந்த சமயம் மருத்துவர் சங்கம் வேலைநிறுத்தம் செய்யவில்லை.

ராஜபக்‌ஷ அரசின் செயற்றினற்ற ஆட்சியின் காரணமாக ஜீ.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டது. அப்பொழுது மருத்துவர் சங்கம் வாய்திறக்கவில்லை. வௌ்ளை வான் கலாசாரத்தின் போதும் மக்கள் கடத்தப்பட்டபோதும் இவர்கள் அறிக்ைகவிடவில்லை.

மருத்துவர் சங்க தலைவரும் வேறு சில உயரதிகாரிகளும் தமது இருப்பிற்காக ராபஜபக்‌ஷ ரெஜிமென்ட்டிற்கு வக்காளத்து வாங்குகின்றனர். தமது இருப்பைவிட நாடு குறித்து சிந்தித்து செயற்படுமாறு அவர்களை கோருகிறேன். தமது இருப்பிற்காக நாட்டை குழப்ப வேண்டாம்.

ஜனவரி 8ஆம் திகதி வெற்றியுடன் ஏற்படுத்தப்பட்ட புரட்சியை தோற்கடிக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எதிர்ப்புரட்சி தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாம் தற்பொழுது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். குறுகிய நோக்கங்களை ஓரங்கட்டி நாட்டு நலனுக்காக செயற்பட கைகோர்க்குமாறு சகலரையும் கோருகிறோம். 


Add new comment

Or log in with...