அதிவேக வீதியில் வேன் புரண்டு பெண் பலி | தினகரன்


அதிவேக வீதியில் வேன் புரண்டு பெண் பலி

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வேன் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (08) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடவத்தை திசையிலிருந்து கொடகம நோக்கி பயணித்த விவசாய காப்பீட்டு சபைக்கு சொந்தமான வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் 76.2 L எனும் மைல்கல் பகுதியிலேயே குறித்த வேன் புரண்டுள்ளதோடு, வேகமாக வந்த வேன் புரண்டு பாதையின் மருங்கில் இருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணமானவர், இரத்தினபுரி, தேவானந்த மாவத்தை, திருவானகெட்டியவைச் சேர்ந்த 28 வயதான பியங்கா செனவிரத்ன எனும் விவசாய அபிவிருத்தி அதிகாரியாவார்.

வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...