வர்த்தக நிலைய கிணற்றில் ஆணின் சடலம் | தினகரன்

வர்த்தக நிலைய கிணற்றில் ஆணின் சடலம்

மன்னாரில் கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிலையமொன்றின் கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 
மன்னார் சின்னக்கடை கிராமசேவகர் பிரிவில்  அமைந்துள்ள கடல் உணவு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிலையத்தில உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின்  சடலம் ஒன்று இன்று (07) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7956","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இன்று (07) காலை குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கிணற்றின் அருகில் வந்தபோது சடலம் இருப்பதை கண்டுள்ளார். 
 
இதனை அடுத்து குறித்த விடயம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிசார் மற்றும் வவுனியா தடயவியல் பிரிவு பொலிசார் சடலத்தை மீட்டனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7957","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இதேவேளை மன்னார் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் அரவிந்தன் மற்றும் குறித்த பிதேசத்திற்கான கிரமசேவகரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 
இதனை அடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா சடலத்தை பார்வையிட்டார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7958","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
பின்னர், சடலத்தை பிரேத பரிசேதனைக்கு உட்படுத்திய பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
 
சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர், சிறுநாவற்குளம் கிராமத்தை சேர்ந்த குடும்பஸ்தரான சுப்ரமணியம் ஜெயராம் (54) என அடையாளம் காணபட்டுள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7959","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இவர், குறித்த தனியார் கடலுணவு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிலையத்தின சாரதியாக பணிபுரிந்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மன்னார் பொலிசார் இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(மார்க் ஆனந்த் - மன்னார்)

Add new comment

Or log in with...