மேம்படுத்திய சொஃப்ட்லொஜிக் King Long சொகுசு பிரயாண சேவை | தினகரன்

மேம்படுத்திய சொஃப்ட்லொஜிக் King Long சொகுசு பிரயாண சேவை

உலகின் முன்னணி சொகுசு பேரூந்து வர்த்தகநாமம் இலங்கையில் ஒரு வருடத்தினுள் 50 வாகனங்களை விற்பனை செய்துள்ளது

சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான Softlogic AUTOMOBILES (PVT) LTD, ராஜகிரியவிலுள்ள தனது பிரதான பேணற் சேவை நிலையத்தை விஸ்தரித்துள்ளதன் மூலமாக உலகப் புகழ்பெற்ற King Long சொகுசு பிரயாண வாகன உற்பத்திகளுக்கான தனது சேவை ஆற்றலை மேம்படுத்தியுள்ளது. இலங்கையில் வளர்ச்சிகண்டு வருகின்ற சுற்றுலாத்துறை மற்றும் புதிய அதிவேக மார்க்கங்களுடன் புதிய போக்குவரத்து வசதிகளின் அறிமுகம் ஆகியவற்றுடன் இணைந்து உல்லாசப் பிரயாணத் துறை மீது செலுத்தப்படுகின்ற கவனம் அதிகரித்து வருகின்ற நிலையில் King Long உடன் சொஃப்ட்லொஜிக் ஏற்படுத்தியுள்ள பங்குடமையானது உள்நாட்டு சொகுசு பிரயாண தொழிற்துறையில் பாரிய மாற்றத்திற்கு வழிகோலும்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"7928","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"650"}}]]

வாகனப் பிரிவிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் தென்னக்கோன் 


 

மேலும் சொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 50 ஆவது சொகுசு பேரூந்து வாகனத்தை விற்பனை செய்துள்ளமை சந்தையில் தரமான சொகுசு பேரூந்துகளுக்கான தேவையை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் தனது பேணற் சேவையினை புதிய மட்டத்திற்குள் எடுத்துச் சென்றுள்ளது தொடர்பாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் கீழ் King Long வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 24 மணி நேர வீதியோர உதவு சேவையை வழங்குவதற்காக இருவரைக் கொண்ட தொழில்நுட்ப அணி ஒன்றின் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உதிரிப்பாகங்களின் கையிருப்பைப் பேணுவதில் பாரிய அளவில் முதலிட்டுள்ள நிறுவனம், கையிருப்பு முகாமைத்துவத்தையும் அடுத்த மட்டத்திற்குள் எடுத்துச் சென்றுள்ளது.

 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"7929","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]

தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான ஷெஹான் டி திசேரா


 

சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பீஎல்சி நிறுவனத்தின் வாகனப் பிரிவிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன் கருத்துத் தெரிவிக்கையில் “எமது குழுமத்தின் தாரக மந்திரமான “வியாபாரத்தில் மிகச் சிறந்தது” என்பதை உண்மையாக்கும் வகையில் உலகளாவில் முன்னிலை வகிக்கும் King Long சொகுசு பேரூந்து வர்த்தகநாமத்துடன் நாம் அனுபவித்து வருகின்ற பங்குடமையையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம். பாவனையாளர்களின் தேவைகள் மற்றும் தொழிற்துறையில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப King Long மற்றும் சொஃப்ட்லொஜிக் ஆகியன ஒன்றிணைந்து, தொடர்ந்தும் புத்தாக்கத்தை முன்னெடுத்து, சந்தைத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான உற்பத்திகளை அறிமுகப்படுத்துகின்றன.”

[[{"type":"media","view_mode":"media_original","fid":"7930","attributes":{"alt":"","class":"media-image","height":"576","style":"width: 650px; height: 366px;","typeof":"foaf:Image","width":"1024"}}]]

 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “King Long வாகன உரிமையாளர் ஒருவர் தான் கொள்வனவு செய்த கணம் முதலாக ஒட்டுமொத்த பேணற் சேவையைப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் அவருக்கு கிடைக்கின்றது. நாம் வழங்கும் மிகச் சிறந்த உதவு சேவையின் காரணமாக King Long ஆனது எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வென்றெடுத்துள்ளதுடன், மிகக் குறுகிய காலத்தில் இந்த வர்த்தகநாமம் முதலாவது ஸ்தானத்தை எட்டவும் வழிகோலியுள்ளது. இதன் காரணமாக பேரூந்து சேவையாளர்கள் மட்டுமன்றி, சொகுசு சுற்றுலாப் பிரயாண சேவையாளர்களும் மீண்டும் மீண்டும் இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். King Long வர்த்தகநாம வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாக சௌகரியமான அனுபவத்தையும், மன நிம்மதியையும் அடைந்துகொள்ள முடியும்”.

 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"7931","attributes":{"alt":"","class":"media-image","height":"366","style":"width: 650px; height: 366px;","typeof":"foaf:Image","width":"650"}}]]

சொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் 2014 நவம்பரில் மிகவும் பிரபலமான வடிவங்களான  XMQ6900Y (37 ஆசனங்கள்), XMQ6117Y (45 ஆசனங்கள்) மற்றும் Kingo பயணிகளுக்கான வான்கள் மற்றும் மினி வான்கள் அடங்கலாக King Long சொகுசு பேரூந்து உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியிருந்தது. King Long பேரூந்து உற்பத்தி வரிசைகளில் 29, 37, 45 மற்றும் 49 ஆசனங்களைக் கொண்ட பேரூந்துகள் அடங்கியுள்ளதுடன், அனைத்தும் நவீன ஜேர்மனிய தொழில்நுட்ப வலுவைக் கொண்டவை.

சொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான ஷெஹான் டி திசேரா குறிப்பிடுகையில் “புதிய King Long பேரூந்து உற்பத்தி வரிசையானது வட்டமான மற்றும் மென்மையான மேற்பாகத்துடன், பாரம்பரியமான சர்வதேச வடிவமைப்பில் வெளிவருவதுடன், எடுப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளது. பயணப்பொதிகளை வைப்பதற்கு பிளவு வகையிலான மேல் இராக்கைகள், உட்புற மேற்பகுதியில் காற்றோட்ட குழாய் மற்றும் முன், பின் புறங்களில் மோல்டிங் செய்யப்பட்ட கதவுகள் உட்பட உட்புறம் சிறந்த வகையில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்கள் தமது தேவைகளுக்கேற்றவாறு இவை அனைத்தையும் விசேடமாக வடிவமைப்புச் செய்துகொள்ள முடியும். சொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் இலங்கையில் ஒட்டுமொத்த பிரயாணத் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக படிப்படியாக வளர்ச்சிகண்டு வருகின்றது. சர்வதேசரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட எமது தொழில்நுட்ப அணி பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு இயந்திர திருத்த வேலைகள் மற்றும் பேணற் சேவைகள், விபத்தின் போது திருத்த வேலைகள் மற்றம் மேற்பாக திருத்த வேலைகளை வழங்கும்”.


Add new comment

Or log in with...