இலங்கையில் 6 ஆண்டு நிறைவை கொண்டாடிய ஓமான் எயார் | தினகரன்

இலங்கையில் 6 ஆண்டு நிறைவை கொண்டாடிய ஓமான் எயார்

ஓமான் சுல்தானேட்டின் தேசிய விமானச் சேவை ஆன, ஓமான் எயார் ஆனது, இலங்கையில் தனது வெற்றிகரமான செயற்பாடுகள் அடங்கிய ஆறு ஆண்டுகளின் பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. கடந்த சில ஆண்டுகளாக ஓமான் எயார் ஆனது நினைவு கூறத்தக்க வளர்ச்சியை இலங்கையில் அநுபவித்து உள்ளது. அத்துடன், சாத்தியமுள்ள விமானப் பறப்புகள்இ ஒரு ஆடம்பரமான பயண அநுபவம் மற்றும் உலகத் தர நியமங்களுக்கு ஏற்ற சேவை ஆகியவற்றுக்காக ஒரு மதிப்பினை இது பெற்று உள்ளது.  
 
இந்த வைபவம் பற்றிக் கருத்துத் தெரிவித்த, ஓமான் எயார் விமான நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான நாட்டு முகாமையாளர் ஆன, கிகான் கருணாரட்ன “ எமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களுடன் இந்த விசேட வைபவத்தைக் கொண்டாடுவதை இட்டு நாம் மிக மிக பெருமை அடைகின்றோம். இலங்கை ஆனது ஓமான் எயார் விமானச் சேவை வலையமைப்பின் 32 வது அடைவிடம் ஆகும். தற்போது ஓமான் எயார் விமானச் சேவை வலையமைப்பு ஆனது 50 அடைவிடங்களை எட்டி உள்ளது.
 
இந்த விமானச் சேவை ஆனது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு வளர்ச்சியினை அடைந்து வருவதைத் தொடர்ந்து வருகின்றது. இந்த ஆண்டு பல முக்கிய மைல் கற்களை அடைந்தமையினை நாம் கொண்டாடினோம். கொழும்பு நகரில் இருந்து மஸ்கட் நகருக்கான தினசரி இரண்டு விமானப் பறப்புக்களை அறிமுகப்படுத்தியமை அம் மைல் கற்களில் ஒன்று ஆகும். தற்போது நாங்கள் ஒரு வாரத்திற்கு 14 விமானப் பறப்புகளை மேற்கொள்கின்றோம்.
 
அத்துடன் இரண்டு அடைவிடங்களுக்கு இடையே ஒரு நாளைக்கு இரு விமானப் பறப்புகளை செயற்படுத்துகின்றோம். எமது பறப்புக்காக போயிங் 787 ட்ரீம்லைனர் ஒன்றினை அண்மையில் நாங்கள் அறிமுகப் படுத்தி இருந்தோம். இந்த முற்று முழுதான புதிய வர்த்தக விமானச் சேவை ஆனது, ஒப்பில்லாத பாரிய ஜெட் அநுபவம் மற்றும் பயண வேக அதிகரிப்பு ஆகியவற்றை அளிக்கின்றது.
 
மேலும், இது மஸ்கட், ஃப்ராங்ஃபேர்ட் மற்றும் மிலான் ஆகிய நகரங்களுக்கு இடையே தற்போது செயற்படுத்தப் பட்டு வருகின்றது. நாம் எப்போதும் எதிர்காலத்தை கூர்ந்து நோக்கி இருப்பவர்களாக இருப்பதால், எமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது பயண வர்த்தகத்திற்காகவும் மற்றும் தொடர்ச்சியான அவர்களது ஆதரவு மற்றும் அநுசரணைக்காகவும் நன்றி செலுத்த விரும்புகின்றேன்.” என்று கூறினார்.
 
இலங்கையில் ஓமான் எயாரின் வெற்றி பற்றிக் கருத்துத் தெரிவித்த, ஓமான் எயாரின் விற்பனைப் பிரிவிற்கான தலைமை அதிகாரியான மஹ்ஃபூட் அலி சலீம் அல் ஹார்தி, “ இலங்கையில் ஒரு உறுதியான வாடிக்கையாளர் தளம் ஒன்றை கட்டி எழுப்புதல் மற்றும் இலங்கையில் எம் வணிகக் குறியின் பிரசன்னத்தைக் கட்டி எழுப்புதல் ஆகியவற்றுக்காக, இலங்கையில் எமது பொது விற்பனை முகவர் ஆன நோர்த் சவுத் லைன்ஸ் உடன் நாம் நெருங்கிப் பணி ஆற்றினோம்.
 
கொழும்பு நகரில் இருந்து மஸ்கர் நகருக்கு செல்கின்ற மது விமானப் பறப்புகள் மிகச் சிறந்த ஏற்றல் காரணி ஒன்றைக் காட்டி உள்ளன. மற்றும் வணிக மற்றும் உல்லாசப் பிரயாணப் பயணிகளின் பயணத் தேவையினை எதிர் கொள்ளக் கூடிய தகமையினை நாம் கொண்டு உள்ளோம்.
 
அதே வேளைஇ ஓமான் நாட்டைத் தளமாகக் கொண்டு, வெளி நாட்டில் பணிபுரியும் இலங்கை நாட்டவர்களின் பயணத் தேவைகளையும் நாம் நிறைவேற்றுகின்றோம். உலகளாவிய ரீதியில், ஓமான் எயார் விமானச் சேவை நிறுவனம் ஆனது, தன்னுடைய மூலோபாய விரிவாக்கத்தை தொடர்வதில் தனது கவனத்தைச் செலுத்துகின்றது. 
 
அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில், மூன்று புதிய பாதைகளை ஆரம்பித்ததுடன், மஸ்கட் நகரில் இருந்து சிங்கப்பூர், கோவா மற்றும் டாக்கா ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானப் பறப்புக்களை வழங்குகின்றது. இலங்கையில் ஓமான் எயார் விமானச் சேவை நிறுவனத்தின் செயற்பாடு ஆனது தொடர்ச்சியான வளர்ச்சியை அநுபவித்தலுக்கான சமநிலையை நன்றாக உருவாக்கி உள்ளது. மேலும் இது, விமானச் சேவையின் பிராந்திய வெற்றியில் ஒரு ஒருங்கிணைந்த பங்கினை தொடர்ச்சியாக வகித்துக் கொண்டிருக்கும்.” என்று கூறினார்.
 
இலங்கையில், ஓமான் எயார் நிறுவனம் ஆனது, ஓமான் எயார் கொல்ஃப் கிளசிக் போன்ற முன்னிறுத்தல்கள் மற்றும் வைபவங்கள் ஊடாக நிலையாக வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கின்றது. ஓமான் எயார் கொல்ஃப் கிளசிக் வைபவம் ஆனது இலங்கை, அவுஸ்ரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 100 கொல்ஃப் விளையாட்டு வீரர்களை ஒரு பாரிய பரிசுக்காக போட்டியிட வைக்கின்றது.
 
இந்த விமானச் சேவை ஆனது, பல்வேறு விருதுகளை வெற்றி கொள்வதன் ஊடாக தொடர்ச்சியாக பல சர்வதேசப் பாராட்டுக்களை அள்ளிக் குவித்து வருகின்றது. 2014 ம் ஆண்டில் உலக பயண விருதுகள் நிகழ்வில், இந்த விமானச் சேவை ஆனது, “மத்திய கிழக்கிற்கான சிறந்த வணிக வகுப்பு விமானச் சேவை” என்ற விருதையும் “ மத்திய கிழக்கிற்கான சிறந்த பொருளாதார வகுப்பு விமானச் சேவை” என்ற விருதையும் பெற்றுக் கொண்டது.
 
இந்த விமானச் சேவை ஆனது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எக்செகட்டிவ் ட்ரவல் மகசின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வெளியீடுகளாலும் அங்கீகரிக்கப் பட்டு உள்ளது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எக்செகட்டிவ் ட்ரவல் மகசின் ஆனது 2014ம் ஆண்டில் ஓமான் எயார் விமானச் சேவையினை உலகில் இரண்டாவது சிறந்த விமானச் சேவை எனப் பெயரிட்டது. மற்றும் பிசினஸ் இன்சைடர் வெளியீடு ஆனது, ஓமான் எயார் விமானச் சேவை நிறுவனத்தை உலகத்தின் மிகச் சிறந்த விமானச் சேவைகள் பட்டியலில் இட்டு வைத்துள்ளது.
 
இலங்கையில், ஓமான் எயார் விமானச் சேவை நிறுவனம் ஆனதுஇ சாத்தியப் பாடு உள்ள மற்றும் சௌகரியமான பறகும் அநுபவத்தை தருவதன் மூலம் எப்போதும் வளர்ச்சி பெறும் வாடிக்கையாளர் தளம் ஒன்றை அமைத்து வைத்து உள்ளது. இந்த விமானச் சேவை ஆனது, தற்போது கொழும்பு நகரில் இருந்து மஸ்கட், அபுதாபி, பஹ்ரேன், டோஹா, டுபாய் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பல நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அமைவிடங்களுக்கு விமானப் பறப்புகளைத் தருகின்றது.
 
இதற்கு மேலதிகமாக, ஓமான் எயார் விமானச் சேவை நிறுவனம் ஆனது, மாலை தீவுகள், பாங்கொக், கோலாலம்பூர் மற்றும் ஐரோப்பிய அடைவிடங்கள் ஆன லண்டன், மிலான், ஃப்ரங்ஃபேர்ட், பாரிஸ் மற்றும் சூரிச் ஆகிய இடங்களுக்கும் விமானப் பறப்புகளை வழங்குகின்றது. ஓமான் எயார் நிறுவனம் ஆனது எமிரேட்ஸ்இ ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்இ எதியோபியன் எயார் லைன்ஸ், டேர்க்கிஷ் எயார் லைன்ஸ், கருடா, கே. எல். எம்., மலேசியன் எயார் லைன்ஸ் மற்றும் ரோயல் ஜோர்தான் ஆகியவற்றுடன் ஒரு கோட்ஷியார் கூட்டுமுயற்சியினை கொண்டு உள்ளமை குறிப்பிடத் தக்கது ஆகும்.
 
ஓமான் எயார் விமானச் சேவை ஆனது எப்போதும் எதிர்காலத்தை நோக்கி இருப்பதால், ஓமான் எயார் ஆனது, உலகத்தின் அனைத்து பிரதான அடைவிடங்களுக்கும் நேரடி விமானப் பறப்புகளை வழங்குவதன் ஊடாக இலங்கையின் வர்த்தக, தொழிற்றுறை மற்றும் உல்லாசப் பிரயாணத் துறைகளுக்கு பங்களிப்பதில் ஒரு பிரதான பங்கினை ஆற்ற எப்போதும் முன்னிற்கின்றது.
 
பயணச் சீட்டுக்களை பதிவு செய்வதற்காக அல்லது வாங்கிக் கொள்வதற்காக www.omanair.com  இற்கு நீங்கள் வருகை தர முடியும். அத்துடன் நீங்கள் இணையத்திலேயே செக் இன் செய்து கொள்ள முடியும். 0112168268 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் ஓமான் எயார் விமானச் சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியும். அல்லது நீங்கள் உங்கள் பயண முகவரை மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ள முடியும்.

Add new comment

Or log in with...