கோதாபயவின் அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு | தினகரன்

கோதாபயவின் அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின், ஆயுதக் கொள்வனவு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (03) ஆஜரானார்.
 
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, அவரால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை முன்வைக்கப்பட்டிருந்தது.
 
குறித்த மனுவை நிராகரித்த ஆணைக்குழு, அது தொடர்பிலான 22 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினையும் வழங்கியிருந்தது.
 
குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றதோடு, அவருடன் மேலும் 3 கடற்படை உத்தியோகத்தர்களும் ஆணைக்குழுவில் சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...