பேஸ்புக் நிறுவனரின் 99 வீத பங்குகளும் நன்கொடை | தினகரன்

பேஸ்புக் நிறுவனரின் 99 வீத பங்குகளும் நன்கொடை

 பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பேர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் நிறுவனத்தில் இருக்கும் தமது 99 வீதமான பங்குகளை நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு மக்ஸ் என்ற மகள் பிறந்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகர்பேர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தனது செல்வத்தை சான் சுகர்பேர்க் இன்னிஷியேட்டிவ் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். மக்ஸ் வளரும் உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கின் தற்போதைய பெறுமதியின் அளவான 45 பில்லியன் டொலர் நன்கொடையை அவர் அறிவித்துள்ளார். எனினும் இந்த பங்குகள் உடன் தொண்டாக வழங்கப்படுவதில்லை. இந்த தம்பதியரின் வாழ்நாளில் அவை வழங்கப்படவுள்ளது.

கடந்த வாரம் பிறந்த மக்ஸின் பிறப்பு பற்றி அறிவிப்பை சுகர்பேர்க் தம்பதியர் கடந்த செவ்வாயன்றே வெளியிட்டனர்.


Add new comment

Or log in with...