சென்னைக்கான விமான பயணங்கள் இரத்து | தினகரன்

சென்னைக்கான விமான பயணங்கள் இரத்து

தென்னிந்தியாவின் சென்னை விமான நிலையம் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் கொழும்பு - சென்னைக்கு இடையிலான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை விமானநிலையத்திலிருந்து இலங்கைக்கு வரும் 7 விமான போக்குவரத்து இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.
 
மேலும், நேற்று (01) இரவு 8.30 மணிக்கு பின்னர் எவ்விதமான விமான சேவைகளும் சென்னை விமானநிலையத்தில் இடம்பெறவில்லை என்பதோடு நாளை (03) காலை 6.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...